என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யோகிபாபு"
- அருள் செழியன் ’குய்கோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
- இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் 'குய்கோ'. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'குய்கோ' படம் வெளியானதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அதை உருவாக்கிய விதமும் ரசிக்கும் படி இருப்பதாகவும், பொதுமக்களின் வாழ்வியலை அழகாக சொல்லி இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருப்பதாகவும் கூறினார்கள். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வெளியாகி இருக்கும் 'குய்கோ' படத்தை பத்திரிகையாளர்கள் பாராட்டி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக 'குய்கோ' அமைந்து இருப்பது படக்குழுவினருக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.
- யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் குய்கோ.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அருள் செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குய்கோ. இந்த படத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, ஸ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பவராக உள்ள யோகிபாபு ஒரு பெண்ணை காதல் செய்ய மாடு மேய்ப்பவனுக்கு பெண் தர மாட்டேன் என்று பெற்றோர் கூறி விட சவுதிக்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு, அந்தோணி தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் துர்கா பேசியதாவது:-
யோகிபாபு திரையில் பார்ப்பது போல் நேரிலும் சிரிச்சுட்டே, சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். இளவரசு அவ்வளவு ஞானத்துடன் என்னிடம் பேசினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார். ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் தயாரிந்த இந்த படம் நாளை (24-ந் தேதி) திரைக்கு வருகிறது.
- நடிகர் யோகிபாபு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார்.
- இவர் படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் நடிகர் யோகி பாபு மனம் உருகி முருகரை வழிபட்டார். பின்னர் அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டார். இதனை தொடர்ந்து பைரவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த போது நடிகர் யோகி பாபுவுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- நடிகர் யோகிபாபு பல திரைப்பிரபலங்கள் படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் 2020-ஆம் ஆண்டு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு யோகிபாபு, பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விசாகன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. யோகிபாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் தன் குழந்தைக்கு பரணி கார்த்திகா என பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில், யோகிபாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் வசந்த் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
- இவர் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனியுடன் இணைந்துள்ளார். அதாவது டோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அஜித் படம் போனால் என்ன டோனியை இயக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- இயக்குனர் ஹரி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். விஷால் 34 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு யோகிபாபு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, காரைக்குடி படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபு, முருகர் சிலை ஒன்றை வாங்கி விஷாலுக்கு பரிசளித்துள்ளார். இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
- டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
யூ டியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை ஏ.வெங்கடேஷ் மேற்கொள்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவும் யோகிபாபுவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் கே.பாலையா இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது.
- இதில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் கே.பாலையா புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், தீபா பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் (BR Talkies Corporation) சார்பில் பி.பாஸ்கரன் மற்றும் பி.ராஜபாண்டியன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு 'புரொடக்ஷன் 2' என்று அழைக்கப்படுகிறது.

கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் யோகிபாபு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
- இவர் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- நடிகர் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி மேன்’.
- 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு 'லக்கி மேன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.