என் மலர்

  நீங்கள் தேடியது "Harish Kalyan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
  பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

  அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.  திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘தனுஷ் ராசி நேயர்களே’ படத்தில் மேலும் ஒரு கதாநாயகி இணைந்திருக்கிறார். #HarishKalyan
  ஹரீஷ் கல்யாண் படத்தில் தற்போது ‘தனுஷ் ராசி நேயர்களே’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ரியா சக்ரவர்த்தி நடிப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தற்போது ரெபா மோனிகா ஜான் மற்றொரு கதாநாயகியாக நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

  இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, "இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், இயக்குனர் சஞ்சய் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, என்னை தான் மனதில் நினைத்திருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.   உண்மையில், நான் இதுவரை செய்த படங்களுடன் ஒப்பிடும்போது இந்த படம் முற்றிலும் புதியதாக இருக்கும். தனுசு ராசி நேயர்களே குடும்பத்துடன் ரசிக்கும் காதல், நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படம். சஞ்சய் எனக்கு கதையை விளக்கி கூறியபோது அது மிகவும் ஜாலியாக இருந்தது. இந்த குழுவில் ஒரு சிறந்த அனுபவத்தை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

  ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

  ரெபா மோனிகா ஜான் இதற்கு முன் தமிழில் ஜெய்க்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ படத்தில் நடித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan
  `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார். 
  `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.

  படத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் பி.வாசு கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார்.  ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

  ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.  ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan #RebaMonicaJohn #RheaChakraborty

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan
  `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார். 
  `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. 

  இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டு நாயகிகளில் ஒரு நாயகியாக பாலிவுட்டின் ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார்.


  ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.

  ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். #DhanusuRasiNeyargalae #HarishKalyan #RheaChakraborty

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்த சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் ரொமாண்டிக் கலந்த காமெடி படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan
  `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.  இந்த படத்திற்கு `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் பற்ணுி பற்றி இயக்குனர் கூறும்போது, 

  "நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசி பலனை அறிய ஆர்வமுடன் இருக்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். 'தனுசு ராசி நேயர்களே' என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது.  இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது. 

  ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதிசெய்து வருகிறோம்" என்றார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
  பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.

  இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.  தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

  தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.  இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.

  பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.

  மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில், இந்த படம் காதல் மற்றும் புரிதல் பற்றியது என ஹரிஷ் கல்யாண் கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan
  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

  படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது,

  “ இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும்.  ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புகிறேன்.

  கதாநாயகி ஷில்பாவுடன் இணைந்து பணிபுரிந்தது சிறப்பானது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது. இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். என்னுடைய கதாபாத்திரமான ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் ” இவ்வாறு கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan #ShilpaManjunath

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் முன்னோட்டம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
  மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள படம் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.

  ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நாயகியாகவும் நடித்துள்ளனர். மாகாபா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன், பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - கவின், இசை - சாம்.சி.எஸ், படத்தொகுப்பு - பவன் ஸ்ரீகுமார், தமிழக வெளியீடு - ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ், தயாரிப்பு - பாலாஜி கப்பா, எழுத்து, இயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடி.  படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

  எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. இந்த படம் ஹரிஷ் கல்யாணை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன் என்றார்.

  படம் வருகிற மார்ச் 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunath

  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். #HarishKalyan #PulwamaAttack
  வெற்றி படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ‘பியார் பிரேமம் காதல்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு நேரில் சென்றிருக்கிறார். 

  அங்கு சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அவரது மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.  அப்போது பேசிய அவர், “தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். #HarishKalyan #PulwamaAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
  ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


  மாதவ் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். கவின்ராஜ் ஒளிப்பதிவும், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunat

  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்த சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் ரொமாண்டிக் கலந்த காமெடி படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். #HarishKalyan #SanjayBharathi
  `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. முக்கியமாக ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.  படம் பற்றிய இயக்குநர் சஞ்சய் பாரதி பேசும் போது,

  என்னுடைய நாயகன் விருப்பம் மிகவும் குறுகியதாக இருந்தது. மிக முக்கியமாக திருமணமாகாத ஒரு இளம் நாயகன் நடிக்க வேண்டியிருந்தது. ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருந்தார். நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. மார்ச் இரண்டாவது பாதியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறோம். தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார். #HarishKalyan #SanjayBharathi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo