தாஷமக்கான் ஃபர்ஸ்ட் சிங்கிள் "Rap Battle" வெளியீடு

இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ப்ரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.
தாஷமக்கான் ஃபர்ஸ்ட் சிங்கிள் "Rap Battle" வெளியீடு
Published on: 

2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர். திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில், தாஷமக்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "Rap Battle" வெளியாகி உள்ளது.

ப்ரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ஹிரிஷ் கல்யாண் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com