என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹரிஷ் கல்யாண்"

    ஹரிஷ் கல்யாண் படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.

    2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'HK15'-ல் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இது 15-வது படமாகும்.

    தொடர்ந்து, வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில், ஹரிஷ் கல்யாணின் 15வது படத்திற்கு 'தாஷமக்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான, ப்ரோமோவை படக்குழு அறிவித்துள்ளது.

    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'HK15'-ல் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இது 15-வது படமாகும்.

    இந்த நிலையில், வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்று கூறப்படுகிறது.
    • படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேன் நடிப்பில் வெளியான படம் 'தலைவன் தலைவி. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலையும் குவித்தது.

    இதையடுத்து, இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகியது.
    • குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது.

    சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் `டீசல்'. பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

    துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    டீசல் திரைப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் டீசல் படம் சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவிட்டில் கூறியிருப்பதாவது:-

    நேற்று டீசல் திரைப்படம் பார்த்தேன். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம். குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது என கூறினார்.

    • ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

    டீசல் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், டீசல் படம் வெற்றி பெறவேண்டி நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி உள்ளிட்ட படக் குழுவினர் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    • நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறையாகும்.
    • ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார்.

    டீசல் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், என்னுடைய படம் எல்லாம் தீபாவளிக்கு வெளியாக கூடாதா? என்று டீசல் படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    டீசல் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹரிஷ் கல்யாண், "நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறை. இது சந்தோஷமாக இருந்தாலும், சில விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகின்றன. என் தயாரிப்பாளர்களிடம் "டீசல் படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது? பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் இல்லையே?" என கேட்கின்றனர். ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை. படத்துக்கு நல்ல கதை, நல்ல ஆட்கள் இருந்தால் போதாதா?" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    • சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடித்துள்ளனர்.
    • இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், டீசல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



    சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் `டீசல்'.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

    துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'டீசல்' படத்தின் டீசர் வெளியானது.

    டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், டீசல் படத்தின் "ஆருயிரே" பாடல் வெளியானது.

    • சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • டீசல் படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

    துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் 'டீசல்' படத்தின் டீசர் வெளியானது!

    திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    • சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.
    • இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.

    71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.

    இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.

    சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

    இந்நிலையில், 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்' படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார். மேலும் படக்குழு இதனை இன்று கேக் வெண்ட்டி கொண்டாடி படத்தில் நடித்த மற்றும் பங்குப்பெற்ற அனைவரையும் அழைத்து படக்குழு விருந்தளித்துள்ளது. அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.
    • சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.

    71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.

    சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

    இந்நிலையில், 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்' படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஹரிஸ் கல்யான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

    71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

    சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.

    சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.

    சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

    சிறந்த பாடலுக்கான விருதை வாத்தி பாடலுக்கு ஜி.வி பிரகாஷ் வென்றுள்ளார்.

    ×