என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டீசல் படம் தீபாவளிக்கு வெளியாக என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க - நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்
    X

    டீசல் படம் தீபாவளிக்கு வெளியாக என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க - நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்

    • நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறையாகும்.
    • ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார்.

    டீசல் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், என்னுடைய படம் எல்லாம் தீபாவளிக்கு வெளியாக கூடாதா? என்று டீசல் படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    டீசல் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹரிஷ் கல்யாண், "நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறை. இது சந்தோஷமாக இருந்தாலும், சில விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகின்றன. என் தயாரிப்பாளர்களிடம் "டீசல் படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது? பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் இல்லையே?" என கேட்கின்றனர். ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை. படத்துக்கு நல்ல கதை, நல்ல ஆட்கள் இருந்தால் போதாதா?" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    Next Story
    ×