ஹரிஷ் கல்யாணின் 15வது படம் குறித்து வெளியான அப்டேட்

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஹரிஷ் கல்யாணின் 15வது படம் குறித்து வெளியான அப்டேட்
Published on: 

2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'HK15'-ல் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இது 15-வது படமாகும்.

இந்த நிலையில், வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com