இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்

இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்று கூறப்படுகிறது. படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்
Published on

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேன் நடிப்பில் வெளியான படம் 'தலைவன் தலைவி. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலையும் குவித்தது.

இதையடுத்து, இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com