search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "athulya ravi"

  ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
  இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  முருங்கைக்காய் சிப்ஸ்


  இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 
  காதல் கண் கட்டுதே, ஏமாலி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது.
  ‘சாட்டை 2’, ‘நாடோடிகள் 2’ என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. அதே நேரம் டுவிட்டரிலும் பிசியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர். அதன் பிறகு `ஏமாலி’ என்கிற படத்தின் வாயிலாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். 

  தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிர்ந்து வருவார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.  இது குறித்து தனது பக்கத்தில், ‘’எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு, ஆதரவை தவிர பெரியது வேறு எதுவும் இல்லை. எனக்கு ஆதரவு மற்றும் அன்பை அளித்த அனைவருக்கும் நன்றிகள்’’ என தெரிவித்துள்ளார்.
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய்யின் 25-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் நிலையில், இந்த படத்திற்காக விஜய் பெயரை நடிகர் ஜெய் கேட்டு வாங்கியிருக்கிறார்.
  பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்த ஜெய் நடிப்பில் நீயா 2 படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

  ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ் மற்றும் லவ் மேட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் லவ் மேட்டர் படம் ஜெய்யின் 25-வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வருகிறார். இதில் ஜெய் ஜோடியாக வைபவி சாண்டில்யா மற்றும் அதுல்யா நடிக்கிறார்கள்.  சந்திரசேகரின் 70-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் இசையமைக்க, ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

  படம் பற்றி நடிகர் ஜெய் கூறும்போது,

  விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி, வெற்றி பெற்ற பல படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய். எனவே லவ் மேட்டர் படத்தில் கார்த்தி என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சந்தோஷமாக ஒத்து கொண்டார். லவ் மேட்டர் படத்தை பொறுத்தவரை கலகலப்புடன் நடிப்பதை என்னால் உணர முடிந்தது என்றார்.

  பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
  பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

  நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

  ‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.

  மற்ற நாடுகளில் இது மாதிரி வி‌ஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.  யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

  காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-

  நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.  வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,

  ‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.

  இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.

  நடிகை ராசிகன்னா கூறும்போது:-

  பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

  ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி, தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார். #AthulyaRavi
  காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவிக்கு நாடோடிகள் 2, அடுத்த சாட்டை என்று வரிசையாக படங்கள் வர இருக்கின்றன. தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

  ‘தாய்மை உணர்வு பெண்ணுக்கே உரியது என்பதுபோல தன்னை நம்பிவரும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஆண்களிடத்தில் மேலோங்கி இருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். இந்தக் குணாதிசயத்தைத்தான் ஆணுக்கான அடையாளமாகவும் நான் நினைக்கிறேன்.

  மற்றபடி சிக்ஸ்பேக் வைத்துக்கொள்வதும் சாகசங்கள் புரிவதும் மட்டுமே ஆண்மையின் அடையாளங்கள் என்று நினைத்துக் கொள்பவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். காதலியோ, மனைவியோ... யாராக இருந்தாலும் அவர்களுக்கான சுதந்திரத்தை தொல்லை செய்யாத ஆண்தான் நல்ல துணையாக இருக்க முடியும்’ என்று உறுதியாக நம்புகிறேன்.  ஏனெனில், பெண்ணின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் அவளது மனம் வெறுக்காத வகையில் நடந்து கொள்வதும்தானே உண்மையான ஆண்மை. அப்படிப்பட்ட நபர் தான் எனக்கு துணையாக வேண்டும்’ என்று கூறி இருக்கிறார். #AthulyaRavi
  மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். #SuttuPidikkaUtharavu
  தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

  கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்தை ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

  செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.   இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை முக்கியமான பிரபலம் ஒருவர் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
  ×