search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Varalakshmi"

  • நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
  • இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

  கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

   

  வரலட்சுமி - சந்தோஷ் பிரதாப்

  வரலட்சுமி - சந்தோஷ் பிரதாப்


  இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது, "'கொன்றால் பாவம்' உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. 'விக்ரம் வேதா' படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார். 


  கொன்றால் பாவம்
  கொன்றால் பாவம்

  படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர் இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குனர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்" என்றார். 

  • நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

  கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'.


  கொன்றால் பாவம்

  1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  கொன்றால் பாவம்

  பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், 'கொன்றால் பாவம்' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  கே.வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி நடித்து வரும் `சேஸிங்' என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் வரலட்சுமி டூப் ஏதுமில்லாமல் சண்டைபோடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படம் உருவாகிறது. 

  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடுகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


  வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தஷி இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

  இது தவிர ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்’, ‘ராஜபார்வை’, ‘கன்னித்தீவு’, ‘கன்னிராசி’, ‘காட்டேரி’, ‘தெனாலி ராமன் பி.ஏ.பி.எல்’, ‘ரணம்’ உள்ளிட்ட படங்களும் வரலட்சுமியின் கைவசம் உள்ளது.

  சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் பிரபல நடிகருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார்.
  பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன.  தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ரூலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. நான்கு மாதங்களுக்குள்ளாகப் படத்தை முடித்து தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
  தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, அடுத்ததாக ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடிக்கிறார். #Varalakshmi
  நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்கள், டிவி நிகழ்ச்சி என பிசியாகவே உள்ளார். தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

  இவை தவிர பிக்பாஸ் ஐஸ்வர்யா, சுபிக்‌ஷா, ஆஷ்னா சவேரியுடன் கன்னித்தீவு, விமலுடன் கன்னிராசி, ஜெய்யுடன் ‘நீயா 2’, வைபவுடன் காட்டேரி, தெலுங்கில் சந்தீப் கி‌ஷணுடன் தெனாலி ராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் எனப் பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நாயகியாகவும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் தஷி இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழ்ப் புத்தாண்டையொட்டு வெளியிடப்பட்டது. ஆக்‌‌ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
  கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய ராதாரவிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்த நயன்தாரா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். #Nayanthara #RadhaRavi
  கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

  அதனைத் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

  இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

  நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

  நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தவர் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகரான அவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு  முன்னுதாரணமாக, வழிகாட்டுபவராக திகழ வேண்டும். 

  சரியான பட வாய்ப்பு இல்லாததால், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைய முயற்சிக்கிறார் ராதாரவி. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது தான். தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவரை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

  ராதாரவி போன்ற பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை பொதுமக்களும், ரசிகர்களும் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது கோரிக்கை. அவரது இத்தகைய கேவலமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன்.

  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விசாகா வழிகாட்டு குழு அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே எனது பணிவான கடைசி கேள்வி.

  எனக்கு துணையாக நின்ற, நிற்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Nayanthara #RadhaRavi #NadigarSangam #KolaiyuthirKaalam

  நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KolaiyuthirKaalam #Nayanthara
  ராதாரவியின் பேச்சு தொடர்பாக எழுந்த கண்டனங்கள்:-

  நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  ‘சமீபத்துல நீங்கள் பெண்களுக்கு எதிராக கீழ்த்தரமான முறையில் பேசியதை வன்மையாகக் கண்டித்து, நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்து போடுறதுல நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கடிதம் விரைவிலேயே வந்து சேரும். இப்போதிலிருந்து உங்கள் பெயரை ‘ரவி’ன்னு வச்சிக்கோங்க. காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது”.


  ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

  ‘இன்று நம் துறையில் இருக்கும் அர்ப்பணிப்பான ஒரு சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரை எனக்குத் தெரியும். அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வீடியோவை முழுதாகப் பார்க்கவில்லை. ஆனால் ராதாரவியை இன்று சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன்’’.


  ராதாரவியின் பேச்சு குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

  ‘பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

  மீ டூ குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப்போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் வி‌ஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.


  திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

  கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூலம் எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது.

  ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் என்றால் பெண்களைப் பற்றி மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் உங்களுக்கு அவரை பலாத்காரம் செய்யத் தோணாது இல்லையா. அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’.

  இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  ‘தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர். காரணம் அவர்கள் வேறு யூனியன் வி‌ஷயத்தில் தலையிட முடியாது என்பதால். ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார். இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் எடுங்கள். அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி.

  இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.


  ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ், ராதாரவியை இனிமேல் தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

  ‘கொலையுதிர் காலம்‘ படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

  ‘மேடையில் அனைவருமே இருந்தார்கள். ராதாரவி சார் சீனியர் நடிகர். அவர் அந்த இடத்தில் அப்படி பேசியிருக்கக் கூடாது. எனக்கே அதில் உடன்பாடில்லை.

  இவ்வாறு மதியழகன் தெரிவித்துள்ளார். #KolaiyuthirKaalam #Nayanthara #RadhaRavi

  முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கன்னிராசி’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #Kannirasi
  விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னிராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  இதையடுத்து விரைவில் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Kannirasi
  பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
  பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

  நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

  ‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.

  மற்ற நாடுகளில் இது மாதிரி வி‌ஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.  யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

  காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-

  நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.  வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,

  ‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.

  இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.

  நடிகை ராசிகன்னா கூறும்போது:-

  பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

  ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  சர்கார், சண்டகோழி 2 படத்தை தொடர்ந்து, பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். #Varalakshmi
  கடந்த ஆண்டு சர்கார், சண்டகோழி 2 ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமியின் கைவசம் வெல்வட் நகரம், கன்னி ராசி, நீயா 2, காட்டேரி, டேனி, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் உள்ளன.

  இந்நிலையில் ராஜ பார்வை படத்திலும் நடித்து வருகிறார். ஜே.கே இயக்கும் இந்தப் படத்தில் கத்தியை லாவகமாகச் சுற்றும் காட்சி இடம்பெறுகிறது.

  அதற்காக நிஜக் கத்தியை அவர் பிடிப்பதை வீடியோ பதிவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன்.  பயிற்சியே முழுமையைத் தரும் அப்போது மிகுந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதை படம் பிடித்த சிகை அலங்கார கலைஞர் ஸ்ரீதருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார்.