டெல்லிக்கு நேரில் சென்று பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.
டெல்லிக்கு நேரில் சென்று பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார்
Published on

புதுடெல்லி:

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.

அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

 சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com