என் மலர்
நீங்கள் தேடியது "vignesh sivan"
இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில், டியூட் படம் ரிலீஸால் தள்ளிப்போனது.
இதற்கிடையே, விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் ஹாய். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வபோது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களுடன் ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த நந்தி சிலைக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர், இவர்களுக்கு சிறப்பு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோலிவுட்டில் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.
இப்படங்களை இயக்கியதோடு, மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உள்பட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், கே.பி.ஜெகன் தற்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதுடன் இப்படத்தில் நாயகனாகவும் அவர் நடிக்கிறார்.
இப்படத்தை 'யுனைடெட் ஆர்ட்ஸ்', எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீஸர் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இதனை, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர்," வாழ்த்துகள் அன்பு அண்ணன் ஜெகன் சார். இந்த படம் உங்கள ஒரு நல்ல நடிகராகவும், ஒரு சிறந்த இயக்குனராகவும் நிலை நிறுத்தும்.. லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.

- இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
- விக்னேஷ் சிவன்- நயன்தாரா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, நயன்தாரா சமீபத்தில் 'டெஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
மேலும், இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- நட்சத்திர தம்பதியான நயந்தாரா - விக்கி அவர்களது குழந்தைகளுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்
இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திரை உலகை சேர்ந்த பலர் அவர்களது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நட்சத்திர தம்பதியான நயந்தாரா - விக்கி அவர்களது குழந்தைகளுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் விக்கி அவரது மகனுடன் பேசுகிறார் அதனை அவரது மகன் மீண்டும் அவருக்கே கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துக் கொண்ட ஜி.பி.முத்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த 'கனெக்ட்' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

ஜி.பி.முத்து
'கனெக்ட்' படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வினய், ஜி.பி.முத்து மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட ஜி.பி.முத்து நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறியதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது, நிகழ்ச்சி நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடம் படம் பார்க்க விரும்புவதாக கூறி அழைத்தனர்.

ஜி.பி.முத்து
ஆனால் என்னை எங்கோ ஒரு ஓரத்தில் அமரவைத்துவிட்டனர். அதோடு அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தரக்குறைவாக நடத்தினர். தூரப்போ என்று விரட்டினர். அது எனக்கு சங்கடமாக இருந்தது எனவே தான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அதன் பிறகு விக்னேஷ் சிவன் என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசினார். நான் அங்கிருந்து கிளம்பி வெகுதூரம் வந்துவிட்டதால் அடுத்த முறை சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
- யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ.
- இப்படத்தை சபரிமலையில் கிளாப் அடித்து விக்னேஷ் சிவன் துவங்கி வைத்துள்ளார்.
யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ. ராஜீவ் வைத்யா இயக்கும் இப்படத்தை சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சன்னிதானம் பிஓ
இப்படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விக்னேஷ் சிவன் - சன்னிதானம் பிஓ
சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை மகர ஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
- தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
- நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தைகளின் பெயரை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். அதன்படி உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, N என்பது நயன்தாராவை குறிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
Dear friends ❤️
— VigneshShivN (@VigneshShivN) April 3, 2023
We have named our blessings , our babies like this ❤️
#Uyir RudroNeel N Shivan
உயிர் ருத்ரோநீல் N சிவன்#Ulag Daiwik N Shivan
உலக் தெய்விக் N சிவன்
N stands for their best mother in the world #Nayanthara ❤️
Happiest & proudest moments of life #Blessed pic.twitter.com/r4RHp0wC8f
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- இந்த போட்டியை திரைப்பிரலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியை திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அதன்படி நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நடிகைகள் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஓராண்டு ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.
தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர்.
விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதற்கு மத்தியில் நாட்கள் ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஓராண்டு ஆகிறது. ஜூன் 9ம் தேதி (இன்று) தங்களது முதலாமாண்டு திருமண நாளை விக்னேஷ் சிவன்- நயன்தாரா கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
நேத்து தான் திருமணம் முடிந்ததுபோல் உள்ளது. திடீரென எனது நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர்.
லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.
இன்னும் பயணிக்க வெகுதூரம் உள்ளது..!
ஒன்றாகச் சாதிக்க நிறைய இருக்கிறது..!
நம் வாழ்வில் உள்ள நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், கடவுளின் அனுகிரகத்துடனும் மிகப்பெரிய ஆசீர்வாதம், நம் திருமணத்தின் இரண்டாம் ஆண்டில் கொண்டு வரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர்.
- இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

குழந்தைகளுடன் நயன்தாரா
நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-கின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நயன்தாரா குழந்தைகளை கையில் வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
- ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது.
- இந்த வீடியோவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஜவான் படத்தின் முன்னோட்ட வீடியோவை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில், "பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே சிறப்பாக பணியாற்றி இருக்கும் இயக்குனர் அட்லியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. முன்னோட்ட வீடியோ சர்வதேச தரத்தில் உள்ளது. அட்லியின் பொறுமையும் கடின உழைப்பும் நன்றாக தெரிகிறது. எனது சார்பாக மிகுந்த பாராட்டும் அரவணைப்பும். நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் இருப்பது கனவு நினைவான மாதிரி உள்ளது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாராட்டு தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார். அதில், விக்னேஷ் சிவன் உங்களின் அன்புக்கு நன்றி. நயன்தாரா அருமையானவர்... ஆனால் இதை நான் யாரிடம் சொல்கிறேன்... உங்களுக்கு முன்பே தெரியும்!!! ஆனால், அவர் இப்போது நன்றாக அடிக்கவும் உதைக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். ஜாக்கிரதையாக இருங்கள்!! என்று ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.






