என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி தரிசனம்"

    விக்னேஷ் சிவன்-நயன்தாராவுடன் ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

    இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில், டியூட் படம் ரிலீஸால் தள்ளிப்போனது.

    இதற்கிடையே, விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் ஹாய். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வபோது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

    இவர்களுடன் ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த நந்தி சிலைக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர்.

    பின்னர், இவர்களுக்கு சிறப்பு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காந்தாரா படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரத்தில் உள்ள ராமணதாசுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    தொடர்ந்து, சூரப்பள்ளி அருகே, நொரச்சிவளவு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    • இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • விக்னேஷ் சிவன்- நயன்தாரா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதனிடையே, நயன்தாரா சமீபத்தில் 'டெஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

    மேலும், இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    • சாமி தரிசனம் செய்தார் கன்னியாகுமரி மாவட்ட தொகுதி எம்.பி. விஜய் வசந்த்.
    • விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    ஆண்டியாலை அரசமூட்டுவிளை நாராயணசுவாமி திருக்கோயில் வருடாந்திர விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட தொகுதி எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மேலும், இப்பதிவுடன் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,"நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தியாகத்தையும், சாதனைகளை விளக்கியும், பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்தும் நேற்று (26-06-2025) நாகர்கோவில் கோணம் கம்பி பாலம் சந்திப்பு அருகே நடைபெற்ற 6வது நாள் தொடர் தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். 

    இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.
    • சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம் செய்தனர்.

    விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    பின்னர், கோவிலுக்கு வெளியே வந்த நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுமா?

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வரும் வெளிநாட்டு பக்தர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமம்

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைெபறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் அதிக அளவில் சிரமம் இருப்பதாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கோவிலில் பக்தர்களுக்கு 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பொது தரிசனமும் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இந்த கோவிலில் குறைந்த அளவு கூட்டம் இருந்தாலும் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கியூ வரிசைகளை அமைத்து நேரடியாக தரிசனம் செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். இதனால் 1000 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தால்கூட பெரிய கூட்டம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

    இதனால் வெளியூர் பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய செல்கின்றனர். ஆனால் பொது தரிசனத்திற்கு எவ்வளவு கூட்டம் உள்ளதோ? அதே அளவுக்கு சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் காத்திருக்கும் அவலநிலை இங்குமட்டும்தான் காண முடிகிறது. அதுவும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய தனி கட்டணம், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய தனி கட்டணம் என 2 வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மேலும் கோவிலில் நுழையும்போது செல்போன்களும் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்கும் தனி கட்டணம் உள்ளது. இதுமட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் கட்டுபாடுகளை மீறி அழைத்து செல்லப்படுவது இன்னும் நடைமுறையில் உள்ளது.

    உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தாலும் அவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பூஜை நேரங்களில் மணி கணக்கில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அப்போது குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    மீனாட்சி அம்மன் கோவிலில் முன்பெல்லாம் நேரடியாக சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் தற்போது நீண்ட கியூ வரிசை பாதைகளை அமைத்து கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டம் இருப்பதுபோல் மாயதோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வரிசை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் தேவையின்றி நேர விரையம் ஏற்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. தற்போது அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பலர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    கோவிலில் பல சிலைகள் சேதமாகி உள்ளது. அவைகளை அவ்வப்போது சீரமைத்தால் கோவில் இன்னும் பொலிவுடன் திகழும். ஆனால் கும்பாபிஷேக காலங்களில் மட்டுமே திருப்பணிகள் செய்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

    கோவிலுக்கு உண்டியல் வசூல் மட்டுமின்றி சிறப்பு கட்டண வசூல் உள்பட பல்வேறு வருமானங்கள் உள்ளது. அதில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்வதில்லை. உபயத்தில் மட்டுமே பணிகளை செய்கின்றனர். கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

    மேலும் உள்ளூர் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து இந்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
    • ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் தொடர்ந்து மார்கழி முதல் தேதியில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.

    ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    6, 7-வது வளைவு களிலேயே பொதுமக்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று சாமி தரிசனத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இது பற்றி உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு. சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி மலைப்பாதையில் போக்கு வரத்து சீர் செய்தனர்.

    அதன் பின்பு பொது மக்கள் 9 மணி அளவில் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர். இந்த கடும் போக்குவரத்து நெருசலால் சென்னிமலை மலை கோவிலில் காலை நேரத்தில் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர்.
    • போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

     கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்த வாய்நத்தம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் அல்லாமல் பிற மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கோவிலில் இதுநாள் வரையில் ஆதிதிராவிடர் மக்கள் உள்ளே நுழைந்து சாமி கும்பிட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் ஆதிதிராவிட மக்களுக்கு இருந்து வந்த நிலையில் இது நீண்ட காலமாகவே தடுக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் நுழைந்த சாமி கும்பிட வேண்டும் என ஆதிதிராவிட சமூக மக்கள் முடிவெடுத்து கடந்த 6 மாத காலமாக போராடி வந்துள்ளனர். இதற்காக சமீபத்தில், இதனால் எழுந்த பிரச்சனையின் காரணமாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கள்ளக்கு றிச்சி கோட்டாட்சியர் அலு வலகத்திலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் இந்த வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளே நுழைந்து சாமி கும்பிடுவதற்கு இன்று ஜனவரி 2ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 300 க்கும் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். தற்போது டிஐஜி யாக பதிவி உயர்வு பெற்றுள்ள பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோரது தலைமையில் அதிரடி படையினர் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்து வரதராஜா பெருமாள் கோவிலுக்கு உள்ளே கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் நுழைந்து சாமி கும்பிட ஆரம்பித்தனர். கோவிலுக்குள் இதுவரை வராத ஆதி திராவிட சமூக மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் கோவி லுக்குள் நுழைந்து பெருமா ளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    அப்போது ஆதிதிராவிட சமூக மக்கள் அனைவரும் பரவசமாக காணப்பட்டனர். ஆதிதிராவிடர் சமூக மக்கள் சாமி கும்பிடு வதற்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வரு கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் எடுத்தவாய் நத்தம் கிராமத்திற்கு வந்து கண்காணித்து வந்தனர்.

    • கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் தொடங்கப்பட்டு பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வி நடத்தப்பட்டு கோவில் கும்பத்தில் புனித அபிஷேக நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் அ.புசலான், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாதர் வெள்ளை, இளங்கோ, ஆறுமுகம், முருகேசன், கணேசன், ராமன், ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் விழா குழு ஒருங்கிணைப்பு பணிகளை மங்கைபாகன், சின்னையா, மாரியப்பன் வெள்ளைச்சாமி, சுரேஷ், கணேசன், வசந்த பாரதி, அருள்மதி, பூங்குன்றன், கிராமத்து இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அவ்வாறு நேற்றும் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், நெய் அபிஷேகம் செய்து மகா தீப ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக் கபட்ட சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார்.
    • கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே புதுவண்டிப்பாளையத்தில் கரையேறவிட்டகுப்பத்தில், அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார். அப்போது நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்தார். அந்த இடம் தான் கடலூர் புதுவண்டி பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலில அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகியுடன் பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார். இதையடுத்து அங்கு பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் கோயிலை வந்தடைந்தனர்.

    ×