search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    சென்னிமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    • இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
    • ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் தொடர்ந்து மார்கழி முதல் தேதியில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.

    ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    6, 7-வது வளைவு களிலேயே பொதுமக்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று சாமி தரிசனத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இது பற்றி உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு. சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி மலைப்பாதையில் போக்கு வரத்து சீர் செய்தனர்.

    அதன் பின்பு பொது மக்கள் 9 மணி அளவில் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர். இந்த கடும் போக்குவரத்து நெருசலால் சென்னிமலை மலை கோவிலில் காலை நேரத்தில் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×