search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Kumbabhishekam"

    • மங்கல இசையுடன் கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன், மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி தீர்த்தம் எடுத்து வருதல், மகா கணபதி ஹோமம், 2-ம் கால பூஜை, கோபுர கலசம் நிறுவுதல், 3-ம் கால பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை மங்கல இசையும், 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மகா கணபதி, மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து மகா கணபதிக்கும், மகா மாரியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.

    • கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் ஸ்ரீ பண்டார அப்பிச்சி, பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வா கத்தினர் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். பின்னர் நான்கு கால பூஜைகள் கோவில் வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோவில் கோபுர கலசத்திற்கு யாக சாலை பூஜையில் இருந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., பவானி அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் பாட்டாளி தினேஷ்குமார் நாயகர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும்

    பவானி, காடையாம்பட்டி, சேர்வராயன் பாளையம், பெரியமோள பாளையம் சின்னமோள பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பண்டார அப்பச்சி, மலையாள பகவதி அம்மன் மற்றும் பல்வேறு வகையான முனிஸ்வர சுவாமிகள் என கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சாமிகளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • வலம்புரி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    • விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் காலயாக பூஜை, 2-ம் காலம் மற்றும் 3-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை அலேன் வீதியில் உள்ள வலம்புரி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது.

    விழாவையொட்டி கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமம், லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடந்தது.  விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் காலயாக பூஜை, 2-ம் காலம் மற்றும் 3-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டன.

    தொடர்ந்து இன்று காலை 4-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பங்கேற்றார். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு வலம்புரி சுந்தர விநாயகருக்கு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வலம்புரி சுந்தர விநாயகர் ஆலய நிர்வாகி குழுவினர் மற்றும் ஊர் பெரியவர்கள் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    • கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்நர்மா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமங்கள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பட்டாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

    சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகரை தரிசனம் செய்து சென்றனர்.

    • புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி பஜனை கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர் கவுண்டர் கே.ஜி. சரவணன், ஊர் தர்மகர்த்தா டி. சிவாஜி கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஊர் கவுண்டர்கள் முனிசாமி, சாமிக்கண்ணு, முன்னாள் தர்மகர்த்தா நடராஜன், வார்டு உறுப்பினர் கீதா ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புனித தீர்த்தம் பெற்று ராதா -ருக்மணி சமேத வேணுகோபால சுவாமியின் அருளைப் பெற்றனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி பரவசம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூர் சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    அப்போது பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி சாமி வந்து ஆடினார்கள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஒன்றிய கவுன்சிலர் சி.லட்சுமி சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

    நல்ல தம்பி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் திருமதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், குணசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தது
    • பக்தர்கள் தரிசனம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது.தற்போது இந்த கோவில் அருகில் புதியதாக சீரடி சாய்பாபாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

    நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கலசங்கள் புறப்பாடும், மூலவர் சாய்பாபாவிற்கும் , கோபுர விமானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, ரோட்டரி கவர்னர் ஜே.கே.என்.பழனி, அரசு மருத்துவமனை ஆலோசனைகுழு உறுப்பினர் கள்ளூர்ரவி, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சீவூர்துரைசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்., அரசு, ம.மனோஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.யுவராஜ்.கெங்கைம்மன் கோவில் நாட்டாண்மை சம்பத், தர்மகர்த்தா பிச்சாண்டி, ஆர்.ரவிசங்கர், எம். முத்து உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ஆட்டோமோகன் மற்றும் உறுப்பினர்கள், விழாக்குழுவினர், புவனேஸ்வரிபேட்டை பொதுமக்கள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது.

    கோவில் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவை அப்பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சிறப்பு யாகபூஜைகள் நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் கிராமத்தில் கமண்டல நதி தென்கரையில் கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு 15-ம்தேதி மாலை முதல் காலயாகபூஜைகளும், 16-ம்தேதி காலை இரண்டாம் கால யாகபூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் அருகே பக்தர்கள் வசதிக்காக முன்னாள் கவுன்சிலர் சசிகுமார் என்பவர் ரூ.3 லட்சம் மதிப்பில் அன்னதான மண்டபம் திறக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 10 மணி அளவில் பொன்னியம்மன் திருவீதி உலாவும் வாணவேடிக்கையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அங்காளபரமேஸ்வரி, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீமுனிஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபாடு செய்தனர்.

    கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு கோவில் வளாகங்களில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம் உட்பட ஹோமங்கள் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மகாபூர்ணாகதி, யாக பூஜைகளை சிவாச்சாரி யார்கள் செய்தனர். இதை தொடர்ந்து திருக்கோவில்களின் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் தாழையூத்து கிராம மக்கள் உட்பட செங்கம் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சி புரத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் வள்ளி தெய்வானை சமேத முருகர், தட்சிணாமூர்த்தி ,மகாவிஷ்ணு, பிரம்மா, ராகு,துர்க்கை மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கலசங்களை வைத்து பூஜைகள் நடந்து வந்தது. இன்று காலை கணபதி ஹோமம் ,கோ பூஜை பூர்ணா ஹூதி நடந்தது.

    இதையடுத்து யாகசாலை யில் வைக்கப்பட்டிருந்த புனித கலசம் மேளதாளம் முழுங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×