என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூடூர் சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வாசனம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை சதுஸ்தான அர்ச்சனை ஹோமம், கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது.
நேற்று காலை கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story






