என் மலர்
நீங்கள் தேடியது "Chokanur Sri Kamatshi Amman"
- மஹாபூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நடைபெற்றது.
- மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ,பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
அவினாசி அருகே சொக்கனூரில் அமைந்துள்ள செங்குந்தர்களின் குல தெய்வமான தேவி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 5மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம், திரவியயாகம், நான்காம் கால பூஜை, நாடிசந்தானம், மஹாபூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நடைபெற்றது.
காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து காலை 10மணிக்கு மேல் தசதரிசனம், மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ,பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டாமைக்காரர் கந்தசாமி, பெரிய தனக்காரர் கொண்டப்பன், நிர்வாக குழு தலைவர் ரமேஷ் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் மகா சந்நிதானம் வேதசிவாகம சிரோன்மணி ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் சண்முக சிவாச்சாரியார் சுவாமிகள், ஐராவதீஸ்வரர் சிவம் ஆகியோரின் சர்வசாதக சிறப்போடு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தை வரம், திருமணயோகம், தொழில் வளர்ச்சி போன்ற மக்கள் குறைகளை போக்குகின்ற தெய்வமாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் மாணவர்கள், பொது சேவை செய்பவர்கள், சமூக சேவை செய்பவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் அற்புத சக்தி வாய்ந்த தெய்வமாகவும் இக்கோவில் அம்மன் விளங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.