என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் மன்னார் சாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவ இயக்குனர்எ.வ.வே. கம்பனுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் புனித கலசத்தை வழக்கறிஞர் கார்த்திகேயன் வழங்கினார். தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது
- ஏராளமான பக்தர் சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார் சாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நேற்று காலையில் நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 23-ந் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது.
முடிவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது.






