search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nayanthara"

    • இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
    • படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

    தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் அரண்மனை 4 படத்தை இயக்கி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2024 ஆம் ஆண்டு தென்னிந்திய SIIMA விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    • தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    2024 ஆம் ஆண்டு தென்னிந்திய SIIMA விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதி துபாயில் நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    தமிழில் விருது வென்ற நபர்களின் பட்டியல்

    சிறந்த படம் - நெலசன் திலிப்குமார் {ஜெயிலர்}

    சிறந்த நடிகர் - சீயான் விக்ரம் [ பொன்னியின் செல்வன் 2]

    சிறந்த நடிகை - நயன்தாரா { அன்னப்பூரணி}

    சிறந்த நடிகர் க்ரிட்டிக் சாய்ஸ் - சிவகார்த்திகேயன் {மாவீரன்}

    சிறந்த நடிகை கிரிட்டிக் சாய்ஸ் - ஐஷ்வர்யா ராய் [ பொன்னியின் செல்வன் 2]

    சிறந்த வில்லன் நடிகர் - அர்ஜுன் {லியோ}

    சிறந்த இயக்குனர் க்ரிட்டிக் சாய்ஸ் - அருண் குமார் {சித்தா}

    சிறந்த பாடலாசிரியர் - விக்னேஷ் சிவன் {ரத்தமாரே}

    மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் - கவின், தாதா

    இந்த ஆண்டின் அசாதாரண நடிகர் - எஸ்.ஜே. சூர்யா

    சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு

    சிறந்த துணை நடிகை - சரிதா ஈஸ்வரி, மாவீரன்

    சிறந்த அறிமுகம் - ஹிருது ஹாரூன்

    சிறந்த துணை நடிகர் - வசந்த் ரவி, ஜெயிலர்

    சிறந்த அறிமுக இயக்குனர் - விக்னேஷ் ராஜா, போர் தோழில்

    சிறந்த அறிமுக நடிகை - ப்ரீத்தி அஞ்சு அஸ்ரானி, அயோதி

    சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - ஷான் ரோல்டன், நான் காலி - குட் நைட்

    இந்த ஆண்டின் வளர்ந்து வரும் தயாரிப்பாளர் - திட்டக்குடி கண்ணன் ரவி, ராவண கோட்டம்

    சிறந்த ஒளிப்பதிவாளர் - தேனீஸ்வர், மாமன்னன்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம்
    • படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

    2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

    தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அவர்களது இரு மகன்களுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
    • இன்று மற்றொரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்லும் வீடியோ. குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதேப்போல் நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அவர்களது இரு மகன்களுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டன்ர்.

    இந்நிலையில் இன்று மற்றொரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் இரண்டு குழந்தைகளும் ஒரு ரூமின் கதவை திறக்க முயற்சி செய்கின்றனர். அதை அவர்களால் திறக்க முடியாதலால். தன்னுடைய தந்தையான விக்கியை "விக்கி அப்பா, விக்கி அப்பா" என்ற மழலை குரலில் அழைப்பது மிகவும் க்யூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.
    • நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் மேல் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் - இல் வெளியாகியது. இந்தியாவில் அதிகமாக பார்த்த படங்களில் மகாராஜா இடம்பெற்றது. இந்தியாவை தவிர பிற வெளிநாட்டு மக்களும் திரைப்படத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நித்திலன் அடுத்ததாக நயன் தாரா நடிப்பில் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மகாராணி என பெயரிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.

    இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தில் அமையும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம்
    • படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் அறிவித்தனர்.

    2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

    தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    ஆர்.ஜே பாலாஜி இப்படத்தை இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இச்செய்தி வெளியாகியுள்ளது. சுந்தர் சி தற்பொழுது வடிவேலுவை வைத்து திரைப்படம் இயக்கி கொண்டு இருக்கிறார், அதைமுடித்துவிட்டு இப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம்.
    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே. நீங்கள் பலரை ஊக்குவித்திருக்கிறீர்கள். உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளக்கப்படுவதல்ல. சாதனைகளை முறியடிக்கும் வகையிலான அன்பை நீங்கள் சேகரித்திருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன.
    • நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், " பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம்" என்று நயன்தாரா கூறினார்.

    வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுடன் எங்கள் இதயம் இருக்கிறது.

    சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.

    ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20,00,000 (ரூபா இருபது லட்சம் மட்டும்) வழங்குகிறோம்.

    நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த உதவியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.
    • சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என ஆதங்கம்.

    செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு என நயன்தாரா பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த மருத்துவர், செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

    நெபுலைசர் குறித்து சமந்தா பதிவிட்டபோதும் எதிர்க்குரல் எழுப்பியவர்தான் Liverdoc என்ற ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ்.

    உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவா? உணவு ஆலோசகருக்கான விளம்பரமா? என டாக்டர் நயன்தாராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என மருத்துவர் சரமாரியாக புகார் தெரிவத்துள்ளார்.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து, செம்பருத்தி டீ தொடர்பான பதிவை நயன்தாரா நீக்கியுள்ளார்.

    மேலும், முட்டாள்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என மார்க் ட்வைன் கருத்தை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.

    • கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான்.

    தமிழ் திரைத்துறையில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் 'நட்புனா என்ன தெரியுமா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    அதன்பிறகு கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடியில் மட்டும் வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    சமீபத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக கவின் நடன இயக்குநரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட்டான விஷ்னு எடவன் இயக்கும் முதல் படத்தில் கவின் நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளது எனவும் செய்திகள் வெளியானது.

    வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், நயன்தாரா - கவினின் புகைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த படத்தை கவினும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதன்மூலம் கவின் - நயன்தாரா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐரா படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார்.
    • எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார்.

    2019 ஆம் ஆண்டு நயன் தாரா மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஐரா திரைப்படம், இப்படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார். இப்படத்தில் நயன் தாரா இரு வேடங்களில் நடித்து இருதார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து , பிளட் மனி மற்றும் புர்கா திரைப்படத்தை இயக்கினார்.

    தற்பொழுது எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார். சர்ஜூன் இயக்கும் இப்படத்திற்கு பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் கதை மற்றும் திரைக்கதை எழுதவுள்ளார்.

    இப்படத்தில் நயன் தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×