search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samanthaa"

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் புதிய மைல்கல்லை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

    அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.



    இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கு கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனைப் படைத்துள்ளது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தை சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. #Mersal #Vijay
    விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’.

    விஜய் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு என்று முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.

    ஜி.எஸ்.டி வரி மற்றும் பணமதிப்பிழப்பு பற்றி பேசப்பட்டதால் சர்ச்சைகளுக்குள்ளானது. ரசிகர்களின் ஆதரவுடன் படம் பெரும் லாபம் ஈட்டியது. ‘மெர்சல்’ ரிலீசான போது வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

    ‘மெர்சல்’ படத்தை சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருகின்றன. சீனாவில் மொத்தம் 40,000 தியேட்டர்களுக்கு மேல் இருக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்கள், பாலிவுட் படங்கள் என உலக சினிமா அனைத்தும் சீன சினிமா மார்க்கெட்டை குறிவைத்தே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.



    அதே பாணியைப் பின்பற்றி, இப்போது ‘மெர்சல்’ திரைப்படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி. ஏற்கெனவே இந்தியாவில் தயாரான தங்கல், பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்கள் சீனாவில் வெளியாகி அதிக வசூலை குவித்தன.

    அமீர் கானின் ‘தங்கல்’, `சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ படங்களை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்ட திரைப்பட நிறுவனத்தின் மூலமாக ‘மெர்சல்’ படத்தை டப்பிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் 6-ம் தேதி, ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது. #Mersal #Vijay

    விஜய் நடிப்பில் கடும் சர்சைகளுக்கு மத்தியில் வெளியான `மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

    தற்போது உலக திரைப்பட விழாக்களில் `மெர்சல்' படம் திரையிடப்பட்டு வருகிறது. தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக `மெர்சல்' படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    முன்னதாக, வருகிற செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #Vijay

    `மெர்சல்' படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்காக ஐஏஆர்ஏ என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்களும் பல்வேறு சாதனைகளை படைத்தது. 

    இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நடிகர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார். #Mersal #Vijay

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்' படம் இந்திய அளிவில் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

    படம் துவங்கியது முதலே மெர்சல் குறித்து புதுப்புது தகவல்கள், ட்விட்டர் எமோஜி என பல்வேறு தகவல்களை படக்குழு சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கியது. படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. 



    இந்த நிலையில், மெர்சல் படம் இந்திய அளவில் ட்விட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ட்விட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் மெர்சல் முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் சார்பில் நேற்று நடைபெற்ற #வணக்கம்ட்விட்டர் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான ட்விட்டர் அமைப்பின் தலைவர் தரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார். #Mersal #Vijay

    பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த `ஆளப்போறான் தமிழன்' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. #Mersal #AalaporanThamizhan #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியிருக்கிறது.  



    ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் வரிகளில் கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் சொல்லம் வரிகளில் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது. 

    அட்லி இயக்கிய இந்த படத்தில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #AalaporanThamizhan #Vijay

    ×