என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinnaithaandi Varuvaayaa"

    • அதில் முதன்மையானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" (2010) திரைப்படம்.
    • இன்றுடன் திரைப்படம் ரீ-ரிலீசாகி 1300 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும் தான் காலம் கடந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் புது புது உணர்வுகளோடு வாழ்ந்து கொண்டே இருக்கும். அதில் முதன்மையானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" (2010) திரைப்படம்.

    இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த கதாப்பாத்திரத்தை இவர்களை தவிர வேறு யாராலும் மிக கச்சிதமாக நடித்திருக்க முடியாது. திரைப்படம் வெளியன போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படம் மீண்டும் ரீ–ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்கள் அளித்த வரவேற்பு இன்னொரு வெற்றிக்கதை. திரையரங்குகளில் மீண்டும் ஹவுஸ் ஃபுல் காட்சி, ரசிகர்கள் ஆரவாரம், பாட்டுகளுக்கு தியேட்டரில் கைத்தட்டல் – இது 2010–ம் ஆண்டின் நினைவுகளை அப்படியே மீண்டும் கொண்டு வந்தது.

    இன்றுடன் திரைப்படம் ரீ-ரிலீசாகி 1300 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒரு காதல் படம் இத்தனை நாட்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, இன்னும் பேசப்படுவது தமிழ் சினிமா வரலாற்றில் அபூர்வம்

    சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் #1300DaysOfVTV என்று ஹாஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் மீண்டும் பார்த்தாலும் புதிதாகவே உணர்வுகளை தரும் படம் என்ற பெருமை VTV–க்கே பொருந்தும்.

    விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு படம் மட்டுமல்ல – அது ஒரு உணர்வு, அது ஒரு தலைமுறையின் காதல் கதை. 1300 நாட்கள் கடந்தும் இன்னும் ரசிகர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது, அந்த படத்தின் மாபெரும் வெற்றியைச் சுட்டிக்காட்டுகிறது.

    • நாக சைத்தன்யா - சமந்தா நடிப்பில் வெளியான 'ஈ மாயா சேசாவா' ரீ-ரிலீஸ் ஆகிறது.
    • 'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் தொடங்கியது.

    சமீபத்தில் பழைய திரைப்படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுவது டிரெண்ட் ஆகி விட்டது. அவ்வகையில் ரீ ரிலீசான கிள்ளி திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

    குறிப்பாக சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீசில் 1000 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.

    நாக சைத்தன்யா, சமந்தா இணைந்து நடித்த 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'ஈ மாயா சேசாவா' படம் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

    தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    திரை அரங்குகளில் ஏற்கனவே வெளியாகி, பின் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் என்ற பெருமையை சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

     


    மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இந்த திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றளவும் இந்த படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்
    • இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் வின்னைத்தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் வின்னைத்தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் 1000 நாட்களை கடந்து இன்றும் ஓடிக்கொண்டி இருக்கிறது. இன்றும் வார இறுதியில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் குறித்து சிம்பு மற்றும் திரிஷா படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து, இப்பட வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
    • இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்தது.

    இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் வெளியான காதல் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தப் படம், இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.

    நடிகர் சிலம்பரசன் டி.ஆர். கூறும் போது, "விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வந்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்," என்றார்.

    நடிகை திரிஷா பேசும் போது, "விண்ணைத்தாண்டி வருவாயா எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எனது நன்றி. இப்படம் இன்னும் பலரின் அன்பினால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நாங்கள் கடந்து வந்த அத்தனை தருணங்களும், மிக மிக அழகான நினைவுகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். மேலும் இந்தப் படத்தை இன்றும் கொண்டாடும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்," என்று தெரிவித்தார்

    இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசும் போது, "சில திரைப்படங்கள் 10, 15, 25 ஆண்டுகள் நிறைவடையும் போது அதைப் பற்றி பேசுவது வழக்கம். ஆனால், 'விண்ணைத்தாண்டி வருவாயா' பற்றி பேசும்போது எனக்கு உணர்ச்சிப் பூர்வமான, மிக ஆழமான உணர்வு தோன்றுகிறது. பலரும் என்னை சந்திக்கும் போது, இன்னும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை நினைவுகூர்கிறார்கள். சிம்பு இல்லையெனில் இந்தக் கதையில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கும் என நான் நிச்சயமாக சொல்ல முடியாது. அத்தனை சிறப்பாக அவர் அந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் அவருக்கு என் நன்றி."

    "திரிஷா என்னிடம் இந்தப்படத்தின் வில்லன் நான் தான், என்னை மக்கள் வெறுப்பார்கள் என்றார். நான் அதற்கு ரசிகர்கள் உங்களை அடிக்கக் கூட கூடும், ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு மக்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்றேன். இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணங்களிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை, இந்தக் கதையில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியது. மனோஜின் காட்சியமைப்பும், ஆண்டனியின் எடிட்டிங்கும் இந்தப் படத்தை மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாக மாற்றின," என்றார்.

    விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோட்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகித்தது. இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் பாடல்களை பாடிய பாடகர்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், சோனி மியூசிக் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறப்பு ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர். lovefullyvtv.com எனும் இணையதளம் விடிவி ரசிகர்களை இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற செய்கிறது. இந்த தளம் மூலம் அனைத்து விடிவி பட ரசிகர்களும் படத்தின் சிறப்பு தருணங்களை, படக்குழுவினரின் அனுபவங்களை, படப்பாடல்களை கேட்டும் பார்த்தும் அனுபவிக்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×