search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silambarasan"

    • விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    திரை அரங்குகளில் ஏற்கனவே வெளியாகி, பின் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் என்ற பெருமையை சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

     


    மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இந்த திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றளவும் இந்த படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்கவில்லை என குற்றச்சாட்டு.
    • நடிகர் சிம்புவுக்கு வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் மனு.

    நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக 2021-ம் ஆண்டு "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாக பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

     

    எனினும், "கொரோனா குமார்" படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ. 1 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. அதன்படி நடிகர் சிம்பு "கொரோனா குமார்" படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால், வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணையில் தான், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு ரூ. 1 கோடிக்கான உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் ஆனதையடுத்து புகார் கூறப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

    புதிய எஸ்.பி. நியமனம்

    தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் இன்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறையின் அறிக்கை யின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 9498101775 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர்.
    • டி.ராஜேந்தர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் டி. ராஜேந்தர். இவர் நடிகர் சிலம்பரசனின் தந்தை ஆவார். டி. ராஜேந்தருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.

    சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால் வெளிநாட்டிலே ஒரு மாத காலம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன் தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். 

    சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொடுத்துள்ளார்.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். 

    தயாரிப்பாளர் பதிவு
    தயாரிப்பாளர் பதிவு

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நவம்பர் 25ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாநாடு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
    ×