என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silambattam"

    • எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
    • "மங்காத்தா" மட்டும் தான் வெற்றி பெற்றது.

    STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

    மறுவெளியீட்டை ஒட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், இயக்குநர் Tராஜேந்தர் பேசும் போது, "என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, "சிலம்பாட்டம்" படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா."

    "அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஆனால், "மங்காத்தா" மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்லை? அது போல இந்த "சிலம்பாட்டம்" கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃபிரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது."

    "சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் "உயிருள்ள உஷா" படமும் ரீ-ரிலிசுக்கு தயாராகிவிட்டது. ஆனால், "சிலம்பாட்டம்" வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். நண்பர் விஜய்யின் "ஜனநாயகன்" படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீசில் என் பையனின் "சிலம்பாட்டம்" பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன், அனைவருக்கும் நன்றி," என்றார். 

    • புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி திரைக்கு வருகிறது.
    • யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன.

    முன்னணி நடிகர்களின் வெற்றி படங்கள் மீண்டும் ரீ-ரிலீசாகும் போக்கு தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட அஜித்குமாரின் 'மங்காத்தா' படம் ரீ-ரிலீசாகி வசூல் குவித்து வருகிறது.

    அந்தவகையில் 2008-ம் ஆண்டில் எஸ்.சரவணன் இயக்கத்தில் சிம்பு, சனா கான், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி 'ஹிட்' அடித்த 'சிலம்பாட்டம்' படம் மீண்டும் ரிலீசுக்கு வருகிறது. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந்தேதி திரைக்கு வருகிறது.

     

    சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் வசூல் குவித்ததுடன், சிம்புவின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன.

    இந்த படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசுக்கு வரவிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

    ×