என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஆர் ரகுமான்"

    • யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

    இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'மூன்வாக்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



    Storm Anthem பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார்.

    'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'மூன்வாக்'. இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

    ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படம் இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பான் இந்தியா படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்

    படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'மூன்வாக்' படத்தின் பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் 'STORM Anthem' பாடலுக்கான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியானது. Storm Anthem பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார்.

    ஜென்டில்மேன், காதலன், லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராம் சரண்- ஜான்வி கபூர் அடிக்க புச்சி பாவு பெத்தி படத்தை இயக்கி வருகிறார்.

    ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிட இருக்கிறது. இது தொடர்பாக சிகிரி என்றால் என்ன? என்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய அவரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது . இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஆச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

    • 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
    • ‘சூரரைப் போற்று’ படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.

    டெல்லியில் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெற்றார்.

    'வாத்தி' படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு 'சூரரைப் போற்று' படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. இரண்டாவது முறையாக தேசிய விருதுகளைப் பெற்றதற்காக ஏ.ஆர்.ரகுமான் சார் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார்.

    மிக்க நன்றி சார், இது நிறைய அர்த்தம் தருகிறது. லெஜெண்ட் பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்னவென்று நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.


    • தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஸ்டூடியோவுக்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டூடியோ உள்ளது. நேற்று தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் அங்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு இரவு 7.10 வரை நீடித்தது.

    இவர்களின் இந்த திடீர் சந்திப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நமது கலாசாரம் சம்பந்தப்பட்ட 'சத்யம், சிவம், சுந்தரம் எனும் வெவ்ஸ்' என்ற குறும்படத்துக்கு இசை அமைத்து கொடுத்ததால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.10 ஆயிரம் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடு.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு

    2023ல் சென்னை ஈசிஆரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆக.12ல் மீண்டும் நடந்த நிகழ்ச்சிக்கு முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும் ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் வாகன நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும், நிகழ்ச்சியை பார்க்க முடியாதவருக்கு இழப்பீடு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ரூ.10 ஆயிரம் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க ஏசிடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • ஏ.ஆர். ரகுமான் அவ்வப்போது கொடுக்கும் நேர்காணல்களில் சுவாரசியமான பதில்களை அளித்து வருகிறார்.
    • ஏ.ஆர். ரகுமானை அவரது ரசிகர்கள் பெரிய பாய் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

    உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

    இரண்டு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான் அவ்வப்போது கொடுக்கும் நேர்காணல்களில் சுவாரசியமான பதில்களை அளித்து வருகிறார்.

    அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் 'பெரிய பாய் என்று அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கும் பெயர் தனக்கு பிடிக்காது என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார். .

    இது குறித்து பேசும் போது, "பெரிய பாய் என்ற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. அதென்ன பெரிய பாய், சின்ன பாய். நான் என்ன கசாப்பு கடையா வைச்சிருக்கேன" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ஏ.ஆர். ரகுமானை பெரிய பாய் என்றும் யுவன் சங்கர் ராஜாவை சின்ன பாய் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்.சி. 16 படத்தை புச்சி பாபு இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய அவரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ஆர்.சி. 16 படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த நிலையில், ஆர்.சி. 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

    • நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
    • கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

    ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், " நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை.

    நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.

    • ஏ.ஆர். ரகுமானுக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக அவரை டாக்டர்கள் பரிசோதித்தார்கள்.

    அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் இசை அமைத்து வருவதால் ஐதரா பாத், மும்பை, லண்டன் என்று சுற்றிக் கொண்டி ருப்பார்.

    அந்த வகையில் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.

    ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.

    ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து அவரது மகன் அமீன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    எங்களது ரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு பிரார்த்தனை ஆதரவு எல்லாவற்றிற்கும் ரொம்ப நன்றி. என் அப்பா நலமுடன் இருக்கிறார் என்பதை உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என முதலமைச்சர் தெரிவித்தார்.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று காலை நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது.

    இதனிடையே ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என்று எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை நீரிழப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் வழக்கமான பரிசோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×