என் மலர்
நீங்கள் தேடியது "மூன் வாக்"
'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'மூன்வாக்'. இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பான் இந்தியா படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்
படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'மூன்வாக்' படத்தின் பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் 'STORM Anthem' பாடலுக்கான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியானது. Storm Anthem பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார்.
ஜென்டில்மேன், காதலன், லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபு மாஸ்டர் - ஏ.ஆர்.ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது
- Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இந்த படத்தை இயக்குகிறார்
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என இந்திய சினிமாவில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏஆர் ரகுமானின் துள்ளலான இசைக்கு காலேஜ் ஸ்டூடென்ட்டாக நடித்த பிரபுதேவாவின் ஸ்டைலான நடன அசைவுகள் பாடல்களை பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கச் செய்தது.
இந்த படத்துக்கு பிறகு பிரபு மாஸ்டர் - ஏஆர்ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், ரகுமானும் இணைந்துள்ளனர். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் குறித்த அபேடேட்டுக்கு ரசிகர்கள் தவம் கிடந்த நிலையில் படத்துக்கு 'மூன் வாக்' என்று பெயரிட்டுள்ளதாக Behindwoods நிறுவனம் டைட்டில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் சிரியுங்கள், பாடுங்கள், உடன் சேர்ந்து நடனமாடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






