என் மலர்
சினிமா செய்திகள்

இறங்கி அடிக்க வேணா ஏத்தி அடிப்போம்... மூன்வாக் படத்தின் மினி கேசட் வீடியோ வெளியீடு
- 'மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார்
- அடுத்தாண்டு கோடை விடுமுறையில் மூன்வாக் படம் வெளியாகவுள்ளது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.
'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மூன்வாக் படத்தின் மினி கேசட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களின் முதல் 1 நிமிடம் இடம்பெற்றுள்ளது. பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து FUN மோடில் இந்த வீடியோவை கொண்டு சென்றுள்ளனர்.
'மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






