என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janhvi Kapoor"

    • நேத்ரா மண்டேனா - வம்சி காடிராஜு ஜோடிக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.
    • இந்த திருமணத்தில் திரை நட்சத்திரங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் பத்மஜா மற்றும் ராம ராஜு மண்டேனாவின் மகள் நேத்ரா மண்டேனாவுக்கும் சூப்பர் ஆர்டரின் இணை நிறுவனர் வம்சி காடிராஜுக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தில், பல்வேறு தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் சர்வதேச விருந்தினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், டிரம்ப் ஜூனியர், ஜான்வி கபூர் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் நடனமாடினர். இந்த கலை நிகழ்ச்சிகளை திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். 

    • புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய அவரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது . இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஆச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

    • இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘வருகிற 29-ந்தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டார்.
    • இந்த பதிவு சமூக வலைதளங்களிலும் வைரலானது.

    இந்தி தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்துள்ள ஜான்வி கபூர், விரைவில் தமிழ் சினிமாவிலும் தனது கணக்கை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வருகிற 29-ந்தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டார்.

    இதையடுத்து அவர் தனது காதல் குறித்தோ அல்லது திருமணம் தொடர்பாகவோ முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக கூறப்பட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களிலும் வைரலானது.

    ஆனால் தனது புதிய படம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதனால் வாழ்த்த வந்த ரசிகர்கள் ஜான்வி கபூரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    • தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது.
    • உலகம் முழுவதும் தேவரா படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

    ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த தேவரா படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமானார்.

    தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

    இந்நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 

    • தமிழ் படங்களிலும் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
    • 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

    நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார்.

    'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்த ஜான்வி கபூர், தற்போது ராம்சரண் ஜோடியாக 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படங்களிலும் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.

    இதற்கிடையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறும்போது, "எனக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை உள்ளது. 3 என்னுடைய லக்கி நம்பராகும். அதற்காகவே 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள நினைக்கிறேன்.

    மேலும், 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். 3-வது குழந்தை இருந்தால், அவர்களை சண்டை போடாமல் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். இருவருக்கும் சமாதானம் செய்யவும், ஆதரவாக இருக்கவும் உதவியாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

    • பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.

    மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் காதலிக்கின்றனர். இவர்களது காதல் மற்றும் குடும்பங்களிடையே பிரச்சனை ஏற்படுகிறது . இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

    இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதியில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்தனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தினேஷ் விஜன் தயாரிக்கும் ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
    • தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரிக்கும் ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் காதலிக்கின்றனர். இவர்களது காதலில் பிரச்சனி ஏற்படுகிறது மேலும் குடும்பங்களிடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

    இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • 'Un Certain Regard' பிரிவில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ஹோம்பவுண்ட் உள்ளது.
    • கய்வான் இயக்கிய முதல் படமான மாசான் திரைப்படம் 2015 கேன்ஸ் விழாவில் தேர்வானது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்த ஹோம்பவுண்ட் திரைப்படம் 78வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    நீரஜ் கய்வான் எழுதி இயக்கிய இப்படத்தில் ஜான்வி கபூருடன், இஷான் கட்டர், விஷால் ஜெத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் 'Un Certain Regard' பிரிவில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ஹோம்பவுண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் வருகிற மே 13 முதல் மே 24 வரை இந்த கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது.

    வெஸ் ஆண்டர்சென், ரிச்சர்ட் லிண்ட்கேர், அரி அஸ்டர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களும் இந்த வருட திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.

    முன்னதாக ஹோம்பவுண்ட் இயக்குனர் கய்வான் இயக்கிய முதல் படமான மாசான் திரைப்படம் 2015 கேன்ஸ் விழாவில் தேர்வானது. இதில் விக்கி கௌஷல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    • இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
    • கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    இப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
    • நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

    நடிகை ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர். 2018-ம் ஆண்டில் 'தடாக்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவில் கால் பதித்து ஜூனியர் என்.டி.ஆர். உடன் ஒரு படத்தில்ஜோடி சேர்ந்து நடித்தார்.

    இந்தநிலையில் ஜான்வி கபூர் கூறியதாவது:-

    தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது. தற்போது டப்பிங் படங்கள் ஏராளமாக வருகின்றன. இதனால் மொழி ரசிகர்களுக்கு முட்டுக்கட்டையாக இல்லை. ஓ.டி.டி. தளங்கள் இருப்பதனால் நல்ல கதைகள் தலைப்புகள் கிடைக்கின்றன. அதை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

    நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் என்னால் நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து வருகிறேன். அப்போதுதான் என்னுடைய நடிப்பு திறமையை கண்காணிக்க முடியும். சினிமாவில் நல்ல முறையில் நடனம் ஆடவும், நகைச்சுவை பண்ணவும் ஆசை. எனது அம்மாவிற்கு தென்னிந்திய சினிமாவில் தான் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவருக்கு அங்கு அன்பும் கிடைத்தது. எனது தகுதியை நிரூபிக்க இதுதான் சரியான நேரம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார்.
    • இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும்.

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி- போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்து நடித்து வருகிறார்.

    இவரது படங்கள் பல வெளியாகி உள்ளன. ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் அவரது நடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

    தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகுகிறது. 

    இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்து உள்ள பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த வீரர்கள் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் தனக்கு பிடித்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×