நடிகைகள் தங்களுக்கு எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும்- நித்யா மேனன்

என்னைப் பொருத்தவரை நான் ஏற்க விரும்பும் கதாபாத்திரங்களில் எப்போதும் தெளிவாக இருப்பேன்’ என கூறினார்.
நடிகைகள் தங்களுக்கு எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும்- நித்யா மேனன்
Published on

‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூர் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. திரை உலகில் பலரும் ஜான்வி கபூருக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜான்வி கபூருக்கு நித்யா மேனன், அனுஅகர்வால் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து நித்யாமேனன் அளித்த பேட்டியில், ‘நடிகைகள் ஒவ்வொருவரும் நடிப்பில் தங்களுக்கு எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தன்னை ஒரு பொருளாக பார்ப்பதை ஏற்க முடியாது என்று உறுதியுடன் இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் ஏற்க விரும்பும் கதாபாத்திரங்களில் எப்போதும் தெளிவாக இருப்பேன்’ என கூறினார்.

அனுஅகர்வால் வெளியிட்ட பதிவில், ‘பெண்கள் கண்ணியத்துடன் சித்தரிக்கப்படுவதை உறுதி செய்வதில் நடிகர்களுக்கும் பொறுப்பு உண்டு. பெண்களை சித்தரிப்பதில் கண்ணியத்தை கடைபிடிக்ககோரி குரல் எழுப்பும் பார்வையாளர்களை நான் பாராட்டுகிறேன். அந்த பொறுப்பு பார்வையாளர்களிடம் மட்டும் இல்லை. நடிகைகளும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

இளம் நடிகைகள் தங்கள் கேரக்டரில் மனித மாண்பை மீறினால் வேண்டாம் என தைரியமாக சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com