காதலரை புகழ்ந்து தள்ளும் ஜான்விகபூர்

ஷிகர் எனக்கு மட்டுமல்ல என் சகோதரி குஷிகபூர், தந்தை போனி கபூருக்கு கூட குடும்ப உறுப்பினர் போல இருந்து வருகிறார்.
காதலரை புகழ்ந்து தள்ளும் ஜான்விகபூர்
Published on

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்விகபூர், ஷிகர்பகாரியை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இருவரும் பொது விழாக்களில் ஒன்றாக வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஜான்விகபூரின் பிறந்தநாளுக்கு அவருடன் ஷிகர்பகாரியும் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். ஷிகர்பகாரியா முன்னாள் உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷின்டோன் பேரன் ஆவார். அவரது தாயார் ஸ்மிருதி ஷிண்டேவும் பிரபல நடிகை.

இந்நிலையில் தனது காதலன் குறித்து ஜான்விகபூர் அளித்த பேட்டியில், ‘ஷிகர்பகாரியாவுடன் இருந்ததை போல வேறு யாருடனும் நான் ஜாலியாக இருந்ததில்லை.

இது ஒரு சாதாரண காதல் உறவு மட்டுமல்ல. முழுமையான ஒரு மகிழ்ச்சியான சூழல். நான் எல்லாவற்றையும் மறந்து உண்மையாக இருப்பதற்கு ஷிகர் எனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அளிக்கிறார். பாலிவுட் உலகில் இது போன்ற விஷயங்களை நீங்கள் தினமும் கேட்க முடியாது. ஷிகர் எனக்கு மட்டுமல்ல என் சகோதரி குஷிகபூர், தந்தை போனி கபூருக்கு கூட குடும்ப உறுப்பினர் போல இருந்து வருகிறார். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உண்மையாக என்னுடன் இருக்கும் ஒரு அரிய வகை பண்பாளர் என காதலரை புகழ்ந்து தள்ளினார் ஜான்விகபூர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com