என் மலர்
நீங்கள் தேடியது "kangana ranaut"
- தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
- எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் அண்மையில் வெளியானது.
தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

கங்கனா ரணாவத்
இந்நிலையில் கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை படக்குழு தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கங்கனா படப்பிடிப்பு தளத்தில் தன் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. கங்கனா ரணாவத் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Get well soon our chief #KanganaRanaut pic.twitter.com/D3WV9IAZFW
— Manikarnika Films Production (@ManikarnikaFP) August 9, 2022
- தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத்.
- 'அக்னிபாத்' திட்டம் ஆழமான அர்த்தம் கொண்டது என்று கங்கனா ரணாவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இதை திரும்ப பெறக்கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. அதேநேரம் இந்த திட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரணாவத் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது.

கங்கனா ரணாவத்
ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது என்றால் என்ன என்பது குறித்து அறியவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அந்தவகையில் அக்னிபாத் திட்டமும், தொழில் வாழ்க்கையை கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது' என குறிப்பிட்டு உள்ளார். இவரின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.





