என் மலர்
இந்தியா

2014-க்கு முன் ஏராளமான ஊழல்கள்... பிரதமர் மோடி மீது ஒரு கறை கூட கிடையாது- கங்கனா ரனாவத்
- சனாதனம், தேசியவாதம், உலகம் ஒரு குடும்பம் என்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாம் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம்.
- 2014ம் ஆண்டுக்கு முன் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் உள்பட ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன.
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியில் மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவர் மண்டியில் உள்ள ஜரோல் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது "சனாதனம், தேசியவாதம், உலகம் ஒரு குடும்பம் என்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாம் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம்.
2014ம் ஆண்டுக்கு முன் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் உள்பட ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன. ஆனால், பிரதமர் மோடி மீது ஒரு கறை கூட கிடையாது" என்றார்.
முன்னதாக இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங், "மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை பார்க்க முடிவதில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு கங்கனா ரனாவத், "பாராளுமன்ற தோல்வி அதிர்ச்சியில் விக்ரமாத்திய சிங் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார். நான் தினசரி பாராளுமன்றத்திற்கு செல்கிறேன். கண்ணுக்கு தெரியாமல் இருக்க நான் மிஸ்டர் இந்தியா இல்லை" எனத் தெரிவித்தார்.
மிஸ் இந்தியா என்ற பாலிவுட் படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அனில் கபூர், தான் மறையும் வகையில் ஒரு கருவியை கண்டுபிடிப்பார். இதை குறிப்பிட்டு கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்தார்.