என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kanimozhi"
- நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன்.
- மீனவர்களை பாதுகாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 5 இடங்களில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
அதனை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புயல் அபாயத்தை தொடர்ந்து கரை ஒதுங்கிய தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 12 தமிழக மீனவர்கள் மாலத்தீவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதி உள்ளேன்.
நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன். விரைவிலேயே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து அவர்களது குடும்பங்களை வந்து சேர வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்து அவர்கள் மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
இதுபோன்ற பிரச்சனைகள் மாலத்தீவிலும் தொடர்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., இலங்கை-தமிழக மீனவர்கள் பிரச்சனையை அங்குள்ள மீனவ அமைப்புகளோடு இங்குள்ள மீனவ அமைப்புகளும் பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறாத சூழல் உள்ளது. அதை மறுபடியும் தொடர்ந்து நடத்தினாலே இப்பிரச்சனைகள் தீர்க்க முடியும்.
ஒவ்வொரு இடத்திலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மிகப்பெரிய போராட்டத்திற்கும் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும், படகுகளை பிடித்து வைத்துக்கொள்வதும் அவர்களது வாழ்வாதாரங்களை பறிப்பது என்பது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்க கூடிய சூழலில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்களை பாதுகாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
பேட்டியின்போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.
- அரசியலுக்காக பா.ஜனதா வெறுப்புணர்வை உருவாக்கும் போது பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் சோனியாவும், பிரியங்காவும் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு விருந்தளிக்கிறார். ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறு, சிறு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பிரதான கட்சியான காங்கிரசுடன் இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை ஒரு தொகுதி கூடுதலாக காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகவும் சில தொகுதிகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சோனியாவிடம் பேச வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.
இந்த நிலையில் இன்று கனிமொழி எம்.பி.யை நிருபர்கள் சந்தித்த போது இது பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த கனிமொழி இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதுவும் இன்று நடைபெறாது.
அரசியலுக்காக பா.ஜனதா வெறுப்புணர்வை உருவாக்கும் போது பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.
- மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- இந்தியா கூட்டணி அமைத்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
சென்னை:
சென்னையில் தி.மு.க. மகளிர் அணி ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாடு இன்று நடைபெறுகிறது.
இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை சுற்றிலும் 300 ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் அகில இந்திய தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரை சந்தித்து பேசியது. முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றது உள்ளிட்ட அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மகளிர் நல திட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா, பிரியங்கா ஆகியோர் நேற்று இரவே சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.
இன்று மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில மந்திரியுமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக சோனியா காந்தி விழா பேரூரையாற்றுகிறார்.
இந்தியா கூட்டணி அமைத்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. மகளிர் உரிமை மாநாடு என்று நடத்தப்பட்டாலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். எனவே இது இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை காங்கிரசுக்கு உண்டு.
தற்போது பா.ஜனதா அரசு மசோதாவை நிறைவேற்றினாலும் உடனடியாக அமல்படுத்தாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்றும் குற்றம் சாட்டுகின்றன.
இந்த சூழலில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை சோனியா காந்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
- அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.
சென்னை:
சென்னையில் நடைபெறும் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கான அங்கீகாரம், பெண் கல்வி என்று தன் ஆட்சி பொறுப்பில் இருக்க கூடிய அந்த கால கட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதற்காக கொண்டு வந்த தலைவர் கலைஞர்.
அவரது நூற்றாண்டில், இப்போது தேர்தல் அடுத்த ஆண்டு வரக்கூடிய இந்த நேரத்தில் சரி பாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தங்களுடைய கருத்துக்களை தங்கள் குரலைபதிவு செய்யக்கூடிய ஒரு மாநாடாக, அவர்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய ஒரு இடமாக இந்த மாநாடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வில் உள்ள பெண்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். எனவே அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
- மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அவர் பிறந்த தினமான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தி.மு.க.வின் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நாளை நடத்தப்படுகிறது.
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த 'மகளிர் உரிமை மாநாடு' நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மகளிர் தலைவர்களை பங்கேற்க செய்ய கனிமொழி எம்.பி. அழைப்பு அனுப்பி இருந்தார்.
அந்த அழைப்பை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அவரது மகள் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினர் லெஷி சிங், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயல் உறுப்பினரான டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
மாநாட்டு தொடக்கத்தில் மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்று பேசுகிறார். மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றி கூறுகிறார்.
இந்த மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டது குறித்தும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, அரசு வேலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பல சட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாநாட்டில் விளக்கி பேச உள்ளனர்.
இது தவிர இன்றைய அரசியலில் பெண்களின் நிலைப்பாடு அவர்களது வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் இந்த மாநாட்டில் தலைவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி இருவரும் இன்றிரவு 10.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள்.
அவர்கள் இருவரும் கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள். இதேபோல் மாநாட்டுக்கு வருகை தரும் மற்ற பெண் தலைவர்கள் அனைவருக்கும் அதே ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வி.ஐ.பி.க்களும் கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குவதால் ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள், பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள் கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பு மகளிர் அணியினரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
- "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
- தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14-ந் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.
இந்த "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடக்கிறது.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒருவாரம் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் அடுத்த மாதம் 14-ந்தேதி கருத்தரங்கு நடைபெறுகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய பெண் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை (24-ந்தேதி) மாலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கும் கனிமொழி எம்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
- பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது.
- எனவே அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.
இதையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி பிரமாண்டமான மகளிர் மாநாடு மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.
இதில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கருணாநிதி செய்த சாதனைகள், கொண்டு வந்த திட்டங்களை பற்றி எடுத்துரைத்து கருணாநிதிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அவர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் எம்.பி. உள்ளிட்ட பிரபலங்களை கனிமொழி எம்.பி. நேரில் சென்று சந்தித்து அழைத்து வருகிறார்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று நிகழ்ச்சிகள் பற்றி விளக்குகிறார்.