என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முந்தைய ஆட்சியில் ஸ்கூட்டி கொடுக்கவில்லையா? கனிமொழிக்கு அதிமுக பதிலடி!
- மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு வரும்
- தமிழ்நாட்டின் “குலவிளக்கு” -களான தாய்மார்களுக்கு ரூ.2000 மாதா மாதம் எடப்பாடியார் 2026 ஆட்சியில் கொடுத்தே தீருவார்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு' இன்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே பெண்களுக்கான ஆட்சியை நடத்தமுடியும் என உங்களுக்கு நன்றாக தெரியும். யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நான் பத்தாயிரம் கொடுக்கிறேன், 2 ஆயிரம் கொடுக்கிறேன், குலவிளக்கு திட்டம் என எதை வேண்டுமானாலும் சொல்லலாம். முன்பு ஸ்கூட்டி கொடுப்பேன் எனக்கூறினார்கள். வந்ததா? எதை சொன்னாலும் எதுவும் வராது என அனைவருக்கும் தெரியும். ஆனால் மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரும்." எனப் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில்,
பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க கனிமொழி அவர்களே! அதிமுக ஒன்றும் திமுக அல்ல, கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட.. Scooty- um அன்றே கொடுத்தார் எடப்பாடியார். தமிழ்நாட்டின் "குலவிளக்கு" -களான தாய்மார்களுக்கு ரூ.2000 மாதா மாதம் எடப்பாடியார் 2026 ஆட்சியில் கொடுத்தே தீருவார்…!
வெல்லும் பெண்கள் - என்று பெயர் வெச்சிருக்கீங்க, பொய்யை மட்டும் சொல்லி , உங்களை நம்பி வந்தவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்காதீங்க! (பிகு ; மற்றவங்க ஏமாற மாட்டாங்க, ஏற்கனவே நீங்கள் சொன்ன மதுஒழிப்பு, நகைகடன் தள்ளுபடி போன்ற தொடர் பொய்கள் , மக்கள் மனசுல வந்து போகுமில்ல) எனக் குறிப்பிட்டுள்ளது.






