என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணிக்கம் தாகூர்"

    • மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.

    மதுரையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று தெரிவித்தார்.

    மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.

    இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது. இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சை கருத்தை பேசுவது ஏன்?"

    கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. அகில இந்தியத் தலைவர்களை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?

    அறைக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்? அவர் மீதான புகார் குறித்து ஆலோசிக்கவே பெங்களூரு செல்கிறேன்" என்று தெரிவித்தார்

    • பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது
    • பாராளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்

    நீங்கள் செய்த பல தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்

    உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது.

    மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம்

    பாராளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது" என்று தெரிவித்தார்.

    • “மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை
    • தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை

    தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், வரும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸின் சில தலைவர்கள் கடந்தசில நாட்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திமுக தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது திமுக அமைச்சர்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளித்து இந்த மோதலை நீட்டித்து வந்தார் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை எனத் தெரிவித்து காங்கிரஸ் கோரிக்கையை நேரடியாக நிராகரித்துள்ளார். மேலும், கூட்டணியைப் பிரிக்கச் சிலர் சதி செய்வதாகவும் தெரிவித்தார்.

    இதற்கு நேற்றே எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு" என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளானது. இந்நிலையில் இன்றும் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  "தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் இந்த நிலைப்பாட்டில் முரண்பட்டாலும், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அமைதியாகவே இருக்கிறார். அனைத்தையும் தலைமை பார்த்துக்கொள்ளும் என அவ்வப்போது வெடிக்க வரும் பிரச்சனையை அமர்த்திவருகிறார். 

    • வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள் முடிவு செய்வார்கள் .

    கூட்டணி ஆட்சியா்?

    அல்லது

    ஒரு கட்சி ஆட்சியா என்பதை .

    2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம்

    தமிழ்நாடு காங்கிரஸ்-ன் தவறு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும்.
    • டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது.

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவிலேயே நிர்வாகத்திற்கு பெயர்போன இயக்கம் தி.மு.க.தான். தமிழ்நாடு தலைசிறந்த நிர்வாகமும், மாநில வளர்ச்சியிலும் முதலிடம் என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாத்துறையிலும் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று உள்ளது.

    காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது. தி.மு.க. பதில் சொல்லவில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறி உள்ளார். நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம்.

    தமிழ்நாடு அரசு அதிகமாக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. அரசு ரூ.5½ லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு ஓராண்டிற்கு வட்டி எவ்வளவு என கணக்கீட வேண்டும். 36,000 முதல் 40,000 கோடி தோராயமாக வரும். புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.

    மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் 10 ஆயிரம் நபர்களுக்கு கொடுத்துள்ளோம்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20 ஆயிரம் பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார். 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும். தற்போது தான் அதனை சரி செய்து 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம்." என தெரிவித்தார். 

    • கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
    • தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டை போலவே புதுவையிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்கள் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை பேசும்.

    ஆனால் இந்த முறை கடந்தசில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்துக்கு காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

    இதனால் புதுவையில் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. செயல்பாட்டுக்கு நாராயணசாமி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்து உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பி உள்ள கேள்விகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2014 லோக்சபா தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

    அவரது எக்ஸ் தள பதிவில், "கூட்டணியில் 8 சதவீதம் வாக்கு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா அல்லது 26 சதவீதம் உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2014-ம் ஆண்டு புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆர். ராதா கிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளர் வி.நாராயணசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகளைப் பெற்று, 34.57 சதவீதம் வாக்கு சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தார்.

    அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாராயணசாமி 1,94,972 வாக்குகளைப் பெற்று (26.35 சதவீதம்) 2-ம் இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கம் 1,32,657 வாக்குகளுடன் (17.93 சதவீதம்) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    தி.மு.க. வேட்பாளர் ஏ.எம்.எச். நஸீம் 60,580 வாக்குகளைப் பெற்று (8.19 சதவீதம்) நான்காம் இடத்தைப் பிடித்தார். இந்த புள்ளி விவரங்களை பதிவு செய்து மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வருகிற சட்டமன்றத் தேர்தல்களில், அதிக வாக்கு வங்கியைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை விட, குறைந்த வாக்கு வங்கியைக் கொண்ட தி.மு.க கூட்டணியில் தலைமை வகிக்க முயற்சிப்பதாக மறைமுகமாக அவர் சாடியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இழிவாகப் பேசும் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

    தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில், புதுச்சேரியில் கூட்டணி தலைமை குறித்த மாணிக்கம் தாகூரின் கருத்து, புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன்.
    • வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும்.

    திருமங்கலம்:

    திருப்பரங்குன்றத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகிறது. காந்தியின் நினைவு நாளை ஒருமைப்படுத்தும் நாளாக பார்க்கிறேன்.

    சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை தலைமை நியமித்த குழு தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து பேசி உள்ளேன்.

    என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் தன்மானம் முக்கியமானது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பதையும் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலைவரும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.

    இந்தியா கூட்டணி என்பது பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை ஒட்டிய காங்கிரஸ் சகோதரர்களை பாராட்டுகிறேன்.

    வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அங்கு அமைப்பு ரீதியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்த உள்ளோம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வந்தே மாதரம் என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்கவும் தெரியும். முதலில் தேர்தல் அறிவிக்கட்டும். கூட்டணி முடிவான பின் தொகுதி பங்கீடு பற்றி பிறகு பேசுவோம் என்றார். 

    • தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
    • அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.

    மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன் என்றும், தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.

    தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.
    • ஏன் இந்த பாரபட்சம், மோடி? ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?

    விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதுரை மெட்ரோ ❌ No

    கோவை மெட்ரோ ❌No

    இப்போது ஓசூர் விமான நிலையமும் ❌No

    ஒன்றுக்கொன்று தமிழ்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மறுக்கப்படுகின்றன. இந்த மாற்று அணுகுமுறை ஏன்?

    ஜிடிபி, ஏற்றுமதி, எம்.எஸ்.எம்.இ., வேலைவாய்ப்பு -

    இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.

    ஆனால் மத்திய திட்டங்களில் மட்டும் புறக்கணிப்பா?

    மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.

    இந்த திட்டங்களை மறுப்பது கோடிக்கணக்கான மக்களின் வாய்ப்புகளை மறுப்பதுதான்.

    அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையிலா வளர்ச்சி?

    கூட்டாட்சி என்பது பேச்சுக்காக மட்டுமா, நடைமுறையில்லையா?

    தமிழ்நாடு சலுகை கேட்கவில்லை.

    தன் உரிமையான பங்கையே கேட்கிறது.

    வளர்ச்சியில் பாகுபாடு ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ஏன் இந்த பாரபட்சம், மோடி?

    ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?

    மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களுக்கும் மக்கள் No சொல்லுவார்கள் 2026 யில்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல...
    • நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல...

    விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல..

    என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக ..

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..

    இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..

    நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல..

    மதவெறி கும்மல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல.

    நட்புக்கு தோழ் கொடுப்போம்.

    உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார். 



    • கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது.
    • எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் 30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது.

    இந்த நிலையில், மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற "வளமிக்க" துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.

    மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.

    எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல் என்று கூறியுள்ளார். 



    • ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.
    • 2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பொங்கல் திருநாளில் காங்கிரஸ் ஏம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல்.

    கேரளாவின் UDF மாடல். கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.

    காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.

    நட்பு +பங்கு. இதுவே UDF அரசியலின் அடித்தளம்.

    UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.

    முக்கியமானது — தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு "பை-பை" சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே.

    அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது — ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.

    IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.

    இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன.

    முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன.

    தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.

    UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு.

    இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர் பகிர்ந்த மற்றொரு பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திமுக ஆன்லைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது.

    நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் .

    2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முடிவு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, "திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்" என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.

    அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%

    திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.

    அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.

    திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 6.47%

    ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%

    2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%

    2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.

    2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங்கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×