என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress-DMK"

    • ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்
    • ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவா அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நீண்ட நாட்களாகவே ஒரு புகை கசிந்துவருகிறது. குறிப்பாக காங்கிரஸ், திமுக மத்தியில். காங்கிரஸ் உள்ளேயே உட்கட்சி மோதல் தொடரும் நிலையில், இடையிடேயே கூட்டணி இடங்கள் தொடர்பாக திமுகவுடனும் ஒரு கருத்து முரண்பாடு நீடிப்பதுபோல் தகவல்கள் வருகிறது. ஆனால் திமுகவுடன் மட்டும்தான் கூட்டணி என மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தை உறுதியாக இருக்கிறார்.

    இதனிடையே கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் பதிலளித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்துல்லா, 

    "சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர்.

    இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் திருமாவளவன், தகைசால் தமிழர் பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் "ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்" என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர்.

    அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது மாணிக்கம் தாகூர் "இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது" மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள்.

    இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய "முடிந்து போன" குரலை மாணிக்கம் தாகூர் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடை அமல்படு த்தக்கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம்.

    புதுச்சேரி:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இ.டபிள்.யூ.எஸ். 10 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை திட்ட மிடுவதற்கான மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, சுப்பையா, காங்கிரஸ் சார்பில் மணவாளன், லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு புருஷோத்தமன் தி.க. சிவ.வீரமணி, மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீர.மோகன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது உமர் பாரூக், சமூக நீதிப் பேரவை கீதநாதன், மனிதநேய மக்கள் கட்சி இஸ்மாயில், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், தமிழர் களம் அழகர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, திராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப் பிரியன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடை அமல்படு த்தக்கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம். அப்போது அதிகாரிகள், இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறினர். ஆனால் இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உத்தரவுகளை மீறி செயல்படுவதாக தெரிகிறது. இதை கண்டித்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×