என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdullah"

    • ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்
    • ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவா அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நீண்ட நாட்களாகவே ஒரு புகை கசிந்துவருகிறது. குறிப்பாக காங்கிரஸ், திமுக மத்தியில். காங்கிரஸ் உள்ளேயே உட்கட்சி மோதல் தொடரும் நிலையில், இடையிடேயே கூட்டணி இடங்கள் தொடர்பாக திமுகவுடனும் ஒரு கருத்து முரண்பாடு நீடிப்பதுபோல் தகவல்கள் வருகிறது. ஆனால் திமுகவுடன் மட்டும்தான் கூட்டணி என மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தை உறுதியாக இருக்கிறார்.

    இதனிடையே கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் பதிலளித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்துல்லா, 

    "சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர்.

    இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் திருமாவளவன், தகைசால் தமிழர் பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் "ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்" என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர்.

    அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது மாணிக்கம் தாகூர் "இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது" மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள்.

    இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய "முடிந்து போன" குரலை மாணிக்கம் தாகூர் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • PMSHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
    • அதிமுகவிற்கு கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.

    PMSHRI திட்டம் தொடர்பாக திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "பாஜக எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அதிமுக அடிமைகள். ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை இவர்களும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்கும் திமுகவுடன் துணையாகவும் நிற்க மாட்டார்கள்.

    PMSHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது, அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் இருக்கும் செய்தி. ஆனால் அதை மறைத்துவிட்டு, பாஜக பரப்பும் அதே பொய்யை அடிமைகளும் பரப்புகிறார்கள்.

    இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அதிமுகவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல. அத்தனையுமே திமுகவால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டவை. அவற்றின் மீது கைவைத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என்பதற்காக தாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதுபோல் நடிக்கும் கட்சிதான் அதிமுக. அவர்களுக்கென்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.

    தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி அவர்களின் காலில் விழுந்து, ஏலம் எடுத்து வைத்துள்ள தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அதிமுகவின் நிரந்தரக் கொள்கை" என்று பதிவிட்டுள்ளார்.

    பாஜக எதிர்ப்பு கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இறங்கி உள்ள சந்திரபாபு நாயுடு, இன்று டெல்லியில் சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ChandrababuNaidu #SharadPawar #FarooqAbdullah
    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு  பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.



    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்கா ஆகியோரை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை தெரிவித்தார்.

    பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் பாஜக அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்ததாக கூறினார்.

    ‘நாட்டில் அமலாக்கத்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அனைத்து தலைவர்களையும் அழைத்து சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்’ என்று சரத் பவார் கூறினார்.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். #ChandrababuNaidu  #SharadPawar #FarooqAbdullah

    ×