என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது - திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்
- பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது
- பாராளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்
நீங்கள் செய்த பல தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்
உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது.
மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம்
பாராளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது" என்று தெரிவித்தார்.






