தென்னகத்தின் எஃகு மனிதர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எம்.பி. கனிமொழி புகழாரம்

பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதி மிக்க தலைவராக முதலமைச்சர் உள்ளார் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் துரோக பாஜக கூட்டத்தோடு அதிமுக கைகோர்த்துள்ளது.
தென்னகத்தின் எஃகு மனிதர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எம்.பி. கனிமொழி புகழாரம்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, "உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்னகத்தின் எஃகு மனிதர் நம் முதலமைச்சர். பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதி மிக்க தலைவராக முதலமைச்சர் உள்ளார்

இந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கும்போது, கழக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லத் தோன்றவில்லை; "வெற்றி நமது" என்பதை அவர் உறுதி செய்துவிட்டார் என்று பாராட்டவே வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பது அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அல்ல. பா.ஜ.க தலைமையிலான கூட்டணி. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அள்ளி அல்ல, கிள்ளிக்கூட கொடுக்காத ஒரு துரோகக் கூட்டணி இது. தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் துரோக பாஜக கூட்டத்தோடு அதிமுக கைகோர்த்துள்ளது.

யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதலமைச்சருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com