search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Varun Dhawan"

  • இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
  • இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

  கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

  தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

  அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
  • ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

  இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார். இவர் பிரபல இந்தி இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

  2010 ஆம் ஆண்டு இயக்குனர் கரன் ஜோஹருக்கு உதவி இயக்குனராக பணிப் புரிந்தார். 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

  கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் . நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
  • இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்கலில் 'All Eyes On Rafah" 2என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.

  பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இருத்தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்திற்கு வராமல் போர் தொடுத்து வருகின்றனர்.

  நேற்று இஸ்ரேலி டிஃபன்ஸ் ஃபோர்ஸ் ரஃபாபில் உள்ள அகதிகள் முகாமில் ஏவுகனைகளை வீசினர், இந்த தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.

  இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து 'All Eyes On Rafah" புகைப்படத்தை பகிர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  ஆலியா பட், டியா மிர்ஸா, கரீனா கபூர், ரிச்சா, வருண் தவான்,ராஷ்மிகா மந்தனா, திரிஷா, சமந்தா, பார்வதி, துல்கர் சல்மான் போன்றவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" படத்தை பதிவிட்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
  • கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.

  இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்  இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  அடுத்ததாக அவர் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர இருக்கிறது. சினிமா மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். உடற்பயிற்சி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் கீர்த்திசுரேஷ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் பக்கத்தில் அவரின் நாய் குட்டி அழகாக நின்றுக் கொண்டு இருக்கிரது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
  • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

  அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

  ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

  இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

  ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

  இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

  அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

  அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • வருண் தவான் நடித்து வரும் திரைப்படம் ‘பேபி ஜான்’.
  • இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார்.

  இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


  கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


  பேபி ஜான் போஸ்டர்

  இந்நிலையில், 'பேபி ஜான்' திரைப்படத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


  • தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
  • இவர் தற்போது குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.


  வருண் தவான் -திரெளபதி முர்மு- சமந்தா

  இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து 'குஷி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


  சிட்டாடல் படக்குழுவினர்

  இந்நிலையில், நடிகை சமந்தா செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்துள்ளார். இவருடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் இருந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  • இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் ‘பெடியா’.
  • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் 'பெடியா'. இந்த படத்தில் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக 'பெடியா' டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.


  பெடியா

  பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் அமர் கவுசிக் கூறுகையில், "படத்தில் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.


  பெடியா

  தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், "தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். மிகுந்த திறைமைசாலியான அமர் கவுசிக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது," என்றார்.

  'பெடியா' திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார். #Anushka
  வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

  வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.

  "மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.  'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

  'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.
  பாலிவுட் நடிகர் வருண் தவான் தன் கையால் சட்டை தைத்து தன்னுடைய தந்தையின் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசாக அளித்துள்ளார். #VarunDhawan #SuiDhaaga
  நடிகர் வருண் தவான் ‘சுய் தாகா’ படத்தில் பெற்ற அனுபவத்தையும், தையல் நுட்பத்தையும் வைத்து ஒரு சட்டையை தைக்கிறார். அதனை அவருடைய அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார்.

  இந்த படத்தில் வருண் தையல் வேலைபாடு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் இந்த படத்தின் மூலம் கைத்தறி கலையையும், தையல் வேலைப்பாடு நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டார். இந்த நுட்பத்தை பயன்படுத்தி தன் தந்தை டேவிட் வருண் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சட்டையை தைக்க முடிவு செய்தார். பரிசளித்து தன் தந்தையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த முடுவு செய்தார்.

  ஒரு அருமையான வண்ணமுடைய கோடைகால துணியை தேர்வு செய்து தன் கைத்தறி கலையை பயன்படுத்தி நீண்ட நாளாக நேரம் எடுத்து சிறப்பாக ஒரு சட்டையை தைத்து முடித்தார்.

  இதனை தன் தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார். இதை கண்ட டேவிட் மிகவும் பிரமாதமாக இருக்கிறது என மகிழ்ச்சியடைந்தார். தன் மகன் இப்படி தானாகவே அருமையான சட்டையை தைப்பார் என நினைக்கவில்லை எனவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.

  வருண் தவானும், அவரது அண்ணன் ரோஹித் என்பவரும் அவர்களது தந்தையின் பிறந்தநாளை மும்பையில் உள்ள ஹோட்டலில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். மேலும் சிறப்பான இரவு உணவும் ஏற்பாடு செய்தனர்.
  ×