அட்லியின் இன்ஸ்டாகிராம் வைரல் பதிவு

ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுவிஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.
அட்லியின் இன்ஸ்டாகிராம் வைரல் பதிவு
Published on

அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com