என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kareena Kapoor"
- "தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும்"
- "ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது"
சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் நடித்த ஹாரர் படமான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகி கமர்ஷியலாக நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வரை வசூலித்துள்ளது.
இந்த படத்தை சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு -வின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது. அரண்மனை 4 திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (மே 31) தியேட்டர்களில் ரிலீசானது. இந்நிலையில் ரிலீஸ் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த குஷ்பு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஹிந்தியில் வெளியான,பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முக்கிய கதைகளமாகக் கொண்ட 'டார்லிங்ஸ்', 'பதாய் ஹோ', 'கிரியூவ்' போன்ற படங்களை தமிழில் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், பெண்களை பிரதானமாக கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தாண்டி கமர்ஷியலான படங்களையும் தயாரிக்க விரும்புவதாக கூறினார்.
ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது. படத்திற்கு கதையே கதாநாயகன் என்ற நிலைக்கு நாம் உயர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஆலியா பட் நடிப்பில் ஹிந்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்ஸ்' திரைப்படம் பெண்கள் மீது நிகழும் குடும்ப வன்முறையைப் பற்றி பேசியிருந்தது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பதாய் ஹோ', கதாநாயகனின் தாய் கருவுற்றதால் அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை பேசிய வித்தியாசமான படமாக அமைந்தது. பதாய் ஹோ படம் தமிழில் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.
மேலும் கரீனா கபூர், தபு, கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிரியூவ் (Crew) திரைப்படம் விமானப் பணிப்பெண்களின் இன்னல்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
- இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்கலில் 'All Eyes On Rafah" 2என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இருத்தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்திற்கு வராமல் போர் தொடுத்து வருகின்றனர்.
நேற்று இஸ்ரேலி டிஃபன்ஸ் ஃபோர்ஸ் ரஃபாபில் உள்ள அகதிகள் முகாமில் ஏவுகனைகளை வீசினர், இந்த தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து 'All Eyes On Rafah" புகைப்படத்தை பகிர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆலியா பட், டியா மிர்ஸா, கரீனா கபூர், ரிச்சா, வருண் தவான்,ராஷ்மிகா மந்தனா, திரிஷா, சமந்தா, பார்வதி, துல்கர் சல்மான் போன்றவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" படத்தை பதிவிட்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
- சமீபத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நடிகை அமலா பால் தொடங்கி, சமந்தா, தனுஷ், டி இமான், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய மனைவி பெயர் அடங்கிய டாட்டூவை நீக்கி உள்ளது தான்.
அதை செய்தது பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான் தான். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்தார் சையிப் அலிகான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் பெயர் தான் சாரா அலிகான்.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சையிப் அலிகான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இருப்பினும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்படுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் சையிப் அலிகானின் டாட்டூ தான். அவர் தன்னுடைய காதல் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சையிப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலிவுட் நடிகை கரீனா கபூர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
- கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துள்ளார். கரீனா கபூர் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்த சமயத்தில் அவர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், கர்ப்பத்தின் அனுபவம் குறித்தும், தனது சவால்களைப் பற்றியும் குழந்தையை எதிர்பார்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பது பற்றியும் அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில், கரீனா கபூர் புத்தகத்தின் தலைப்பில் பைபிள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக கரீனா கபூர் மீதும் புத்தக விற்பனையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் புனித நூலாக பைபிள் உள்ள நிலையில், கரீனா கபூர் தனது கர்ப்பத்தை பைபிள் உடன் ஒப்பிடுவது தவறு என்றும், கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரீனா கபூரின் புத்தகத்தின் உடைய தலைப்பில் பைபிள் என ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை குறித்து கரீனா கபூர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆண்டனி தனது மனுவில் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரியதை அடுத்து, புத்தக விற்பனையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.
- யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப் சாப்டர் 1 படம் வெளியானது. பான் இந்தியன் படமாக இப்படம் அமைந்தது . கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் நகர்த்தி சென்றது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது கே.ஜி.எஃப் திரைப்படம். கன்னடா திரைத்துறையில் அதிகம் வசூலித்த படம் இதுவே.
யாஷ் இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதற்கடுத்து கே ஜி எஃப் பகுதி 2 வெளியானது அப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி நடித்து 2019 வெளியான 'மூத்தோன்' படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் நாரயணன் மற்றும் யாஷ் இணைந்து கே வி என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கவுள்ளனர்.
யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் கரீனா கப்பூர் நேற்று நடந்த நேர்காணலில் அவர் ஒரு மிக பெரிய சவுத் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார் அப்படம் பான் இந்தியன் படமாக இருக்கப்போகிறது என கூறியுள்ளார். கரீனா கபூர் டாக்சிக் படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு டாக்சிக் படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ்.
- தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார்.
கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ். இவர்கள் மூவரும் கோஹினூர் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிப்புரிகிறார்கள். மூன்று கதாநாயகிகளுக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பண நெருக்கடி வருகிறது.
வாழ்கையில் அடுத்து பணத்துக்காக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவர்கள் வேலை செய்யும் விமானத்தில் தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க கட்டிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.
தங்க கட்டிகளை மூவரும் சேர்ந்து கடத்தினார்களா? இல்லையா? அதில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பதே கதை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதைக்களம் மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன். இவர் இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த 'லூட் கேஸ்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெலி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உடல்நடக்குறைவு காரணமாக நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதி.
- நடிகர் சையித் அலிகானுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையித் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் உடல்நடக்குறைவு காரணமாக நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கைக்கு பிறகே, சையித் அலிகானின் உடல்நிலை குறித்து விவரம் தெரியவரும்.
ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து, பான் இந்தியா படமான தேவராவில் இவர் நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது குறிப்பிடதக்கது.
- கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார்.
- ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.
இந்தி நடிகை கரீனா கபூர் திரைத்துறையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 39 வயதான அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.
அவர் எதை செய்தாலும் சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுத்த காரியத்தை செய்யக்கூடியவர். சமீபத்தில் யூனிசெப்பின் புதிய முயற்சியான 'எவரி சைல்ட் ரீடிங்' திட்டத்தின் நல்லெண்ண தூதராக கரீனா கபூர் நியமிக்கப்பட்டிருந்தார்.
நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் முதலில் ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சிகரமாக காட்சியளித்த அவரது தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டினர்.
குறைந்த மேக்கப்புடன் காணப்பட்ட கரீனா தனது தலைமுடியை தளர்வாக வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து மஞ்சள் நிற பேண்ட்-சூட் உடையில் அவர் தோன்றினார். அவரது இந்த இரண்டு தோற்றங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்த படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.
- பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான்.
- இவர் புகைப்படக்காரர்களை கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சையிப் அலிகானும் கரீனா கபூரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினார்கள்.
சையிப் அலிகான் - கரீனா கபூர்
அப்போது வீட்டின் எதிரே சில புகைப்படக்காரர்கள் காத்து நின்றனர். சையிப் அலிகான் மனைவியுடன் வந்ததும் இருவரையும் புகைப்படம், எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதோடு அவர்களை பின் தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்றுவிட்டனர். இதனால் கோபமான சையிப் அலிகான் ஒன்று செய்கிறீர்களா. அப்படியே எங்கள் படுக்கை அறைக்கே வந்து விடுங்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.
சையிப் அலிகான் - கரீனா கபூர்
உடனே புகைப்படக்காரர்கள் பின்வாங்கினர். பின்னர் புகைப்படக்காரர்கள் பார்த்து கோபமாக கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றார். சயீப் அலிகான் கோபப்பட்டு பேசும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. சமீபத்தில் இந்தி நடிகை அலியாபட் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று சிலர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது.
- பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கரீனா கபூர்.
- இவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் அண்மையில் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரண் ஜோக்கர் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
கரீனா கபூர்
இவர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய நடிகை கரீனா கபூரை ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுப்பதற்காக சூழ்ந்துள்ளனர். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்த ரசிகர்கள் பலர் அவரை தள்ளவும் செய்துள்ளனர்.
கரீனா கபூர்
இதைத்தொடர்ந்து நடிகையின் பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் கரீனா கபூர் விமான நிலையத்திற்கு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
- லால் சிங் சத்தா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் 'லால் சிங் சத்தா' படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், 'உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகி விடப்போவது கிடையாது' என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து படத்தை புறக்கணிக்க போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கரீனா கபூர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில், 'இந்த படத்தை புறக்கணிக்காதீர்கள். 2.5 வருடமாக இந்த படத்துக்காக 250 பேர் உழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள்' என கூறியுள்ளார்.
இதற்கிடையில் கரீனாவின் இந்த இருவேறு கருத்துகளையும் ஒன்றாக இணைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகிறார்கள். 'கரீனா கபூர் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டு விட்டார்' என சக நடிகர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதனால் கரீனா கபூர் செய்வதறியாது திகைத்திருக்கிறார்.
தற்போது பட்டோடி குடும்பத்தை சேர்ந்த நடிகை கரீனா கபூரை போபால் தொகுதியில் களம் இறக்க அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். போபால் காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் கூறும்போது, “போபால் தொகுதியில் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து கைப்பற்ற புதுமுகத்தை இறக்க வேண்டும். கரீனா கபூர் இந்த மண்ணின் மருமகளாகி விட்டதால் அவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இதை கரீனா கபூர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்” என்றார்.
இதற்கு கரீனா கபூர் விளக்கம் அளித்து கூறும்போது, “என்னை தேர்தலில் போட்டியிடும்படி எந்த கட்சியும் அழைத்தாலும் கூட அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. நான் அரசியல் கட்சியில் இணையப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்” என்றார். #ParliamentElection #KareenaKapoor
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்