வயது வெறும் நம்பர் மட்டுமே...! - கரீனா கபூர்

இளம் கதாநாயகிகளுக்கு போட்டியாக படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் ஐதராபாத்தில் நடந்த ஒரு நகைக்கடை தொடக்க விழாவில் பங்கேற்றார்.
வயது வெறும் நம்பர் மட்டுமே...! - கரீனா கபூர்
Published on

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின்பும் வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே என்று தனது உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துள்ளார்.

45 வயதிலும் அதே இளமை தோற்றத்தில் இருக்கும் கரீனா கபூர் பெண்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார்.

அதிகாலையில் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மாலை 6.30 மணிக்கு இரவு உணவு, 9 மணிக்கு உறக்கம் என அவர் கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்கள் அவரை அழகு குறையாமல் பார்த்து வருகிறது.

இளம் கதாநாயகிகளுக்கு போட்டியாக படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் ஐதராபாத்தில் நடந்த ஒரு நகைக்கடை தொடக்க விழாவில் பங்கேற்றார்.

பிரமிக்க வைக்கும் பாரம்பரிய சல்வார், தங்க நகைகள் அணிந்து விருந்தினர்களுடன் உரையாடிய கரீனாகபூர் தோற்றங்கள் விழாவில் குவிந்திருந்த கேமரா கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com