search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீமேக்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.
    • சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து டந்த ஜூன் 14 ஆம் தேதி வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மகுடம் சூடியுள்ளது. இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். வெகு நாட்களாக விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகத் திரையில் பார்க்காத ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது.

    விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.

    இந்நிலையில் மகாராஜாவை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறதாம் . மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள் பின்னர் முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு இணையாக அமீர் கான் மட்டுமே பாலிவுட்டில் நடிக்க முடியும் என்று ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்
    • இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிக்காமல் இருந்த நிலையில் எடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

    அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும். பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் அந்தகன் படத்தை இயக்குகிறார்.

    மேலும் இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அந்தகன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
    • இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

    தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.
    • ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.

    பின் நாட்களில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கூர்மையான சமூக அரசியல் கருத்துக்களை கூறுவதற்கு பரியேறும் பெருமாள் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் சமீபத்திய படங்களில் தவிர்க்க முடியாத கிளாசிக் படமாக மாறியது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் 'தடக்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 'தடக் 2' என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார்.

     

    சித்தாந்த் சதுர்வேதி மற்றும் துருப்தி டிம்ரி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோவில் , கல்வி, கிளர்ச்சி, வகுப்பு மற்றும் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான பல முழக்கங்களைக் காண்பிக்கும் சுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது. தலித் காதல் முக்கியம், உங்கள் சிந்தனையை மாற்றுங்கள், சமூகத்தை மாற்றுங்கள், அமைதியைக் குலைக்க காதலர்கள் இங்கே இருக்கிறார்கள், மற்றும் எதிர்ப்பு சமத்துவமாகிறது உள்ளிட்ட வாசனகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அதே சுவரில் ஒரு காலத்தில் ஒரு ராஜா, ஒரு ராணி இருந்தார்கள். அவர்களின் சாதிகள் வெவ்வேறாகும், இதனால் கதை முடிந்தது என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.
    • கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

    இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.இருவருக்கு இடையில் வெடிக்கும் ஈகோ கிளாசை திரில்லிங் டிராமாவாக 'பார்க்கிங்' திரைப்படம் உருவாகியிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான அளவில் வசூலைக் குவித்தது.

    கர்ப்பிணி மனைவிக்காக கார் ஒன்றை வாங்கும் ஈஸ்வர் (ஹரிஸ் கல்யாண்). வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு இருக்கும் இடத்தில் காரை பார்க் செய்வதால் இளம்பரிதிக்கு (எம்.எஸ்.பாஸ்கருக்கு) பைக்கை நிறுத்துவதில் சிரமமாகிறது. இதனால் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஈகோ மோதலாக வெடிக்கிறது.

     

    வம்புக்கு இளம்பரிதியும் ஒரு காரை வாங்க மோதல் இன்னும் தீவிரமடைகிறது. இதனால் அவர்களின் குடும்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதே பார்க்கிங் படத்தின் 2 மணி நேர கதை. காமெடி ரோல்களில் மட்டுமின்றி சமீப காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்திலும் ஈகோ கொண்ட சராசரி நபர் கதாப்பாத்திரதத்தில் மிரட்டியிருப்பார்.

    கோடி கோடியாக செலவு செய்து வில்லன்களை டெரராக காட்ட முன்னணி இயக்குநர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேலையில், கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

     

    இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமம் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5 மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச மொழி ஒன்றிலும் பார்க்கிங் படம் ரீமேக்காக உள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது
    • இப்படத்தில் இடம் பெற்ற வலையோசை என்ற பாடல் கிளாசிக் பாடல்களின் வரிசையில் இணைந்தது

    உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1988ல் வெளிவந்த சத்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இளையராஜா இசையில், இப்படத்தில் இடம் பெற்ற வலையோசை என்ற பாடல் கிளாசிக் பாடல்களின் வரிசையில் இணைந்தது.

    அண்ணாமலை , பாட்சா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம் இந்த சத்யா தான். 1985-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த அர்ஜுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் தான் இந்த சத்யா.

    கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.
    • கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ரீமேக்.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

    இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.

    திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், திரிஷ்யம் திரைப்படத்தின் 1ம் மற்றும் 2ம் பாகம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒரு இந்தியத் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

    கடந்த ஆண்டு கொரிய மொழியில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பனோரமா ஸ்டுடியோஸ் பெற்ற நிலையில், தற்போது கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டிலும் அதனை ரீமேக் செய்ய முன்வந்துள்ளனர்.

    ×