என் மலர்

  நீங்கள் தேடியது "Pariyerum Perumal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.
  • இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.


  நெல்லை தங்கராஜ்

  தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் நேற்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், நெல்லை தங்கராஜுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


  மாரி செல்வராஜ் -நெல்லை தங்கராஜ்

  அதில், "ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும் .. பரியேறும் பெருமாள்" என்று பதிவிட்டுள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.
  • இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் நெல்லை தங்கராஜ் காலமானார்.

  2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.

   

  நெல்லை தங்கராஜ்

  நெல்லை தங்கராஜ்


  இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal
  இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 
  பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

  பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.  புதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. #PariyerumPerumal
  ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.

  இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கியவர்)

  இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.  இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். 

  விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் நடைபெறும் தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழாவில் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களும், கக்கூஸ் என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal #Kaala #Kakkoos
  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரும் 23, 24-ந் தேதிகளில் முதலாவது ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ நடைபெற இருக்கிறது.

  சர்வதேச அளவில் வெளியான தலித் சமூகம் சார்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

  இதில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தமிழ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சாய்ரத், ஃபான்றி படங்களை இயக்கிய மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் இந்தியாவில் இருந்து கவுரவிக்கப்படுகிறார்கள்.

  தமிழில் வெளியான காலா, பரியேறும் பெருமாள் படங்களும், கக்கூஸ் ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கின்றன. மலையாளத்தில் இருந்து ‘பபிலியோ புத்தா’ திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  இந்த பட்டியலில், ‘மாசான்’, ‘ஃபேண்ட்ரி’, ‘போலே இந்தியா ஜெய் பீம்‘ ஆகிய திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளன.

  ‘காலா’ திரைப்படத்தில் தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட சாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள் அப்படியே முன்வைக்கப்பட்டன.  காலா படத்தை இயக்கிய ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து இருந்தார்.

  இத்திரைப்படங்களுக்கு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ கவுரவம் வழங்கியுள்ளது. மலம் அள்ளும் தொழில் பற்றி திவ்யபாரதி இயக்கத்தில் ‘கக்கூஸ்’ தமிழ் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  ‘வி ஹேவ் நாட் கம் ஹியர் டூ டை’, ‘தி பேட்டில் ஆப் பீமா கோரேகான்’ உள்ளிட்ட மேலும் பல ஆவணப்படங்களும் இங்கு திரையிடப்பட உள்ளன. இதுதான் முதலாவது ஆண்டு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா’ ஆகும்.

  இதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான் சட்ட மேதை அம்பேத்கர், 1927-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பி.எச்டி பட்டம் பெற்றார். 1952-ம் ஆண்டு, அம்பேத்கருக்கு இந்த பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி கவுரவித்தது. #PariyerumPerumal #Kaala #Kakkoos #USInternationalFilmFestival

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கினார் #CIFF #ChennaiInternationalFilmFestival
  சென்னையில் 16-வது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

  இந்தோசினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

  சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்து கொண்டு சிறந்த படங்களுக்கு பரிசுகளை அளித்தார்.

  சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ராட்சசன்’, ‘வட சென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது.  ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.

  விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படமும் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

  ‘வட சென்னை’ படத்தின் இயக்கத்துக்காவும், ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

  இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது. #CIFF #ChennaiInternationalFilmFestival #PariyerumPerumal #96The Movie

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PariyerumPerumal #Kathir
  நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். 

  கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்.


  சாதியை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படமும் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #PariyerumPerumal #Kathir #KayalAnandhi
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #Dhanush #PariyerumPerumal
  பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார்.

  இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள். 

  தற்போது இப்படத்தை தனுஷ் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். #Dhanush

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. #PariyerumPerumal
  பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 

  படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். 

  இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டது. பல ஊர்களிலும் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  கோவாவில் நடைபெறும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த ரஜினி, பல இடங்களில் சிலிர்த்து விட்டேன் என்று பாராட்டி இருக்கிறார். #Rajini #PariyerumPerumal
  இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், கயல் ஆனந்தி, கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

  மேலும், ‘ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print