என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பரியேறும் பெருமாள் இந்தி ரீமேக்.. தடக் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு
    X

    பரியேறும் பெருமாள் இந்தி ரீமேக்.. 'தடக் 2' படத்தின் டிரெய்லர் வெளியீடு

    • 'அனிமல்' புகழ் திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் சித்தார்த் சதுர்வேதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.
    • முதல் பாகமான 'தடக்', மராத்தி படமான 'சாய்ராத்' என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.

    இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் ஆக 'தடக் 2' என்ற படம் உருவாகியுள்ளது.

    கரண் ஜோகர் தயாரிப்பில் ஷாஜியா இக்பால் இயக்கத்தில் 'அனிமல்' புகழ் திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் சித்தார்த் சதுர்வேதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.

    முதலில், இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவிருந்தது, ஆனால் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகிறது. தற்போது படத்தின் டிரெய்லரானது வெளியிடப்பட்டுள்ளது.

    இப்படத்தின் முதல் பாகமான 'தடக்', மராத்தி படமான 'சாய்ராத்' என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

    சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். அதேபோல பரியேறும் பெருமாள் ரீமேக்காக 'தடக் 2' உருவாகியுள்ளது.

    Next Story
    ×