என் மலர்

    சினிமா செய்திகள்

    என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும்.. நெல்லை தங்கராஜுக்கு மாரிசெல்வராஜ் இரங்கல்..
    X

    நெல்லை தங்கராஜ் -மாரி செல்வராஜ்

    என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும்.. நெல்லை தங்கராஜுக்கு மாரிசெல்வராஜ் இரங்கல்..

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.
    • இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.


    நெல்லை தங்கராஜ்

    தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் நேற்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், நெல்லை தங்கராஜுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    மாரி செல்வராஜ் -நெல்லை தங்கராஜ்

    அதில், "ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும் .. பரியேறும் பெருமாள்" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×