search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதர்வா"

    • புறநானூறு படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
    • புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டம்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.

    கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்தார்.

    இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது. தொடர்ந்து படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

    இந்நிலையில், புறநானூறு படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, நடிகர் அதர்வா சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரபல மலையாள நடிகர் ரோஷன் மாத்தியூ வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • அதர்வா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ.
    • இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    அதர்வா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹான போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    'டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள்.

    பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடும். க்ரைம் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் 'டிஎன்ஏ' திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ளார்.

    நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

    இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களை 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

    நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

    இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம் இது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் படத்தைக் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஒருப்படத்திற்கு ஒரு இசையமைப்பாளர் இருப்பதுதான் வழக்கம் ஆனால் புதிதாக டி.என்.ஏ திரைப்படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

    சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி,
    • ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

    நயன்தாரா, "'நேசிப்பாயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்" என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.

    நடிகை அதிதி, "முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி".

    அதர்வா முரளி, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர்.
    • நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

    உடலை மிகவும் ஃபிட்டாக மற்றும் உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்துபவர் நடிகர் அதர்வா.

    நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர். வெப் தொடர் மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றது.

    இதற்கிடையில் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக 'டிஎன்ஏ' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நெல்சன் வெங்கட் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். சமீபத்தில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்பொழுது படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார்.

    நிஹாரிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான நிஹாரிகா நகைச்சுவை பாணியில் வீடியோகளை வெளியிடுவதில் திறம் பெற்றவர் .

    அதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நிஹாரிகா 5 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய திறம் பெற்றவர்  அதனால் இவர் எந்த மொழியிலும் நடிகையாக நடித்து வளம் வர வாய்ப்பு அதிகம். இவர், அதர்வா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேசமயம் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன்.
    • அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் டி.என்.ஏ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் டி.என்.ஏ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தா படத்தில் புகழ் பெற்ற நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் தலைப்பு கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில். தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதர்வாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    டி.என்.ஏ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180"
    • இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180". இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளரான அதுல் போசாமியா கனத்த இதயத்துடன் அஞ்சலி குறிப்பை வெளியிட்டார். அதில்

    அன்புள்ள டேனியல்,

    அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது.

    உங்களது கடைசி திரைப்படமான 'பிபி 180' இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு எப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். உங்கள் சொந்த சேமிப்பில் நீங்கள் ஆவடியில் கோயில் கட்டி இருக்கிறீர்கள் என்ற விஷயம் அறிந்து நாங்கள் வியந்தோம். உங்களுடன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த கோயில் இல்லாமல் இன்னும் இரண்டு கோயில்கள் கட்ட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஒன்று சிவனுக்கு, இன்னொன்று லட்சுமிக்கு. கடந்த மாதம் நீங்கள் குஜராத்துக்குச் சென்றிருந்தீர்கள். அப்போது உடன் வந்த நாங்களும் சோம்நாத் ஜோதிர்லிங் மற்றும் ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆகிய இடங்களை தரிசித்தோம். அங்கு நீங்கள் ருத்ர அபிஷேகம் செய்தீர்கள்.

     

    உங்கள் எல்லைக் கடந்த திறமைக்கு அப்பால், நீங்கள் ஒரு கனிவான மற்றும் கருணையான நபர். எப்போதும் உதவிக் கரம் நீட்டவும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தீர்கள். படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடைய சோர்ந்து போன நாட்களைக் கூட ஒளிரச் செய்தது உங்கள் இருப்பு. மேலும், உங்கள் சிரிப்பு உங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

     

    நீங்கள் இனி உடலால் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள். நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இனிவரும் தலைமுறைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள்.

    அன்புள்ள டேனியல், நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பும் உங்கள் நினைவும் எங்கள் இதயங்களில் ஒருபோதும் குறையாது.

    ஆழ்ந்த அனுதாபங்களுடனும் என்றென்றும் நன்றியுடனும்,

    அதுல் போசாமியா   

    என  குறிப்பிட்டுள்ளார் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைய உள்ளனர்.
    • பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி

    பிரபல திரைப்பட இயக்குனர் எம். ராஜேஷ் நகைச்சுவை திரைப் படங்களை உருவாக்குவதில் சிறப்பு பெற்றவர். இவர் 'சிவா மனசுல சக்தி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' , ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கி பெற்றவர்.

    இந்நிலையில் தற்போது எம். ராஜேஷ் அதர்வா, அதிதி ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 'பிரதர்' திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். எனவே இப்படத்திற்குப் பின் அதர்வா - அதிதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

    இவர்கள் இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைய உள்ளனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி , கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் இவருக்கு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களை குவித்து வருகிறார். தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் அதிதி அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

    • இயக்குனர் விஷ்ணு வர்தன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வர்தன் கடைசியாக 'ஷெர்ஷா' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது. தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.


    மேலும், சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

    ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


    • அதர்வா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.


    இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    டி.என்.ஏ போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு படக்குழு 'டி.என்.ஏ' என தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகாரளித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
    • நடிகர் தனுஷ் படப்பிடிப்புக்கு வராமல் நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார்.

    அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நான்கு நடிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.


    சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகாரளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கொள்காட்டி ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு, செலவு வைக்காதது தொடர்பாக ரெட்கார்டு கொடுக்கவுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷிற்கு ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கு ரெட்கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

    ×