பழி வாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும்... அதர்வா படத்தின் டீசர் வெளியானது

குட்டி மற்றும் சாரா என இரு வேடங்களில் அதர்வா நடிப்பது உறுதியாகி உள்ளது. டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பழி வாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும்... அதர்வா படத்தின் டீசர் வெளியானது
Published on

ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, அதர்வா நடித்துள்ள புதிய படத்திற்கு 'வலை' என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அதர்வா குட்டி மற்றும் சாரா என இரு வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. டீசரில் 'பழி வாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும். ஒன்று உங்க எதிரிக்கு, மற்றொன்று உங்களுக்கு' என்ற வசனம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

கடற்கரையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரூபா மஞ்சரி, வாணி போஜன், முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், அர்ஜெய், அருள் டி சங்கர், இமான் அண்ணாச்சி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெப்சி வி.எஸ். பால முரளி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com