அதர்வா நடிக்கும் 'தணல்' படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.
அதர்வா நடிக்கும் 'தணல்' படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக தணல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com