என் மலர்
சினிமா செய்திகள்

டிஎன்ஏ படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
- கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 'டிஎன்ஏ' படம் வெளியானது முதல் இதுவரை ரூ.4.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






