search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nimisha sajayan"

    • சித்தா படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன்.
    • சமீபத்தில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில். சித்தா படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார்

    சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன்.

    தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

    சமீபத்தில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில் சித்தா படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்கலங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நிமிஷா சஜயன் தேசிய விருது வென்ற திரைக்கதை எழுத்தாளரான சஞ்சீவ் பழூர் இயக்கும் தமிழ்  படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு என்ன விலை என தலைப்பிட்டுள்ளனர். சஞ்சீவ் இயக்கும் முதல் திரைப்படம் இதுவே.

    இதற்குமுன் சஞ்சீவ் ஃபஹ்த் ஃபாசில் நடிப்பில் வெளிவந்து மாநில அரசு விருதை வென்ற திரைப்படமான தொண்டி முத்தாலும் திரிக்சாக்ஷியும் படத்திற்கு திரைக்கதை எழுதியவராவர்.

    என்ன விலை திரைப்படம் தமிழில் உருவாகவுள்ளது. திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ளது. நிமிஷா சஜயனுடன் கருணாஸ், ஒய்.ஜி மகேந்திரன், ரஜேந்திரன், விஜயலட்சுமி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை கமலாலய பிலிம்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடந்த நிலையில். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா.
    • 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

    இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார். சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் விமர்சனம் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் உச்சத்தை தொட்டது. படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ மற்றும் சந்தோஷ் நாரயணன் பாடிய உனக்கு தான் போன்ற பாடல் மிகப் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது.

    நேற்று 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அதில் தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    சித்தா திரைப்படம் மொத்தம் 7 பில்ம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.

    சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்- சித்தார்த் , சிறந்த நடிகை- நிமிஷா சஜயன், சிறந்த குணச்சித்திர நடிகை - அஞ்சலி நாயர், சிறந்த பின்னணி பாடகி - கார்த்திகா வைத்தியநாதன் , சிறந்த இசை - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாரயணன், சிறந்த இயக்குனர் - எஸ்.யூ அருண் குமார்

    இதனால் படக்குழுழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பிலிம் ஃபேர் விருதுடன் சித்தார்த் இருக்கும் அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழுவினருக்கு பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ளார்.

    நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

    இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களை 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

    நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

    இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம் இது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் படத்தைக் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஒருப்படத்திற்கு ஒரு இசையமைப்பாளர் இருப்பதுதான் வழக்கம் ஆனால் புதிதாக டி.என்.ஏ திரைப்படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

    சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் 'பர்ஹானா', 'மான்ஸ்டர்' மற்றும் 'ஒரு நாள் கூத்து' போன்ற சிறந்த படங்களை உருவாக்கி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
    • நிமிஷா சஜயன் தனது யதார்த்தமான மற்றும் அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்.

    ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாடா' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமார் தலைமையிலான இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து பல படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது.

    அவற்றில் ஒன்றுதான் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'டிஎன்ஏ'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

     

     

    தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்றவரான அதர்வா முரளியின் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதர்வா முரளி பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகனாகவும் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராகவும் இருக்கிறார். நிமிஷா சஜயன் தனது யதார்த்தமான மற்றும் அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்.

    இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் 'பர்ஹானா', 'மான்ஸ்டர்' மற்றும் 'ஒரு நாள் கூத்து' போன்ற சிறந்த படங்களை உருவாக்கி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.இந்த மூன்று அற்புதமான ஆளுமைகளும் 'டிஎன்ஏ' படத்திற்கு ஒன்றிணைந்துள்ளது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

    படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தை ஆகஸ்ட் 2024 இல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்க, விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.
    • ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார்.

    சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.

    தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . படத்தில் அவரது நடிப்பை லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஒவ்வொரு விழாக்களிலும் பாராட்டினார்கள்.

    அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பாராட்ட வைத்தது.

    தொடர்ந்து ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் விரைவில் வெளியாக இருக்கிறது.

    சினிமா மற்றும் வெப் தொடர்களில் பிசியாக நடித்து வரும் நிமிசா சஜயன் சமூக வலைத்தளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டு அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் அருவி ஒன்றில் ஆனந்தமாக குளித்து மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிமிஷா சஜயன்.

    இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவர்ச்சியாகவும் நடிப்பதற்கு நிமிஷா ரெடி என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன்.
    • அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் டி.என்.ஏ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் டி.என்.ஏ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தா படத்தில் புகழ் பெற்ற நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் தலைப்பு கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில். தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதர்வாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    டி.என்.ஏ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ”கேங்க்ஸ் குருதி புனல்” என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது
    • நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    ஓடிடி தளத்தில் முதன்மை தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் "ப்ரைம் வீடியோ பிரசண்ட்ஸ்" என்ற விழாவை நடித்தினர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

    2024 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் என்னனென்ன படங்கள் இடம்பெற போகிறது என்பதை அறிவிப்பதற்காகவே இந்த விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் 69 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டனர்.

    தமிழ் சினிமாவில் மிகவும் எதிர் பார்க்கப்படும் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தை 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் "கேங்க்ஸ் குருதி புனல்" என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இக்கதை 70 காலக்கட்டத்தில் நடக்கும் நாடகமாகும், ஒரு துறைமுக நகரத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்குள் பழிவாங்கும் மற்றும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் ரத்தப் போராட்டமாக இக்கதைக்களம் அமைந்துள்ளது.

    ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இந்த வெப் சீரிஸ்சில் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். நோவா இக்கதையை இயக்கியுள்ளார். இக்கதையை நோவாவுடன் சேர்ந்து தமிழ் பிரபா மற்றும் பிரபு காளிதாஸ் எழுதியுல்ளனர். கேங்க்ஸ் குருதி புனல் வெப்சீரிசின் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கபடவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×